படம் இயக்குவதை தொடர்ந்து.. புதிய தொழில் துவங்கிய இயக்குனர் ஹரி..! பிசியாகும் மனைவி ப்ரீத்தா..!
கமர்சியல் படங்களை இயக்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஹரி, தற்போது படம் இயக்குவதை தாண்டி புதிய தொழில் துவங்கியுள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாக ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கமெர்சியல் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வரும், முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ஹரி. தமிழில், நடிகர் பிரசாந்த், மற்றும் சிம்ரன் நடித்த 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கிய இவர் இதை தொடர்ந்து விக்ரமை வைத்து இயக்கிய சாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து கோலிவுட் திரையுலகில் கணிக்க கூடிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார். மேலும் இவர் கிராமத்து கதை மனம் கமழும் கதை காலத்துடன், எடுத்த கோவில், அருள், ஐயா, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம், வேங்கை போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்ப்பை கிடைத்தது.
குறிப்பாக சூர்யாவை வைத்து இவர் இயக்கிய சிங்கம் சீரிஸுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சாமி ஸ்கொயர் படத்தை இயக்கி முடிந்த பின்னர், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் இவர் தன்னுடைய மைத்துனர், அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கிய 'யானை' திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
யானை படத்தின் வெற்றிக்கு பின்னர், அடுத்ததாக யாரை வைத்து ஹரி படம் இயக்குவார் என எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், தற்போது புதிய தொழில் ஒன்றையும் துவங்கியுள்ளார்.
அதாவது புதிய டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை துவங்கி உள்ளாராம். இதன் திறப்பு விழாவில்... அவரின் மனைவி ப்ரீத்தா, மாமனார் விஜயகுமார், மாமியார் என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அதே போல், ஹரி படம் இயக்குவதில் பிசி ஆகிவிட்டால் ப்ரீத்தா தான் டப்பிங் ஸ்டுடியோ முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, கவனித்து கொள்வார் என கூறப்படுகிறது.