- Home
- Cinema
- வலிமை இயக்குனரின் மாஸ்டர் பிளான்... AK 61 உடன் அஜித்தை கழட்டிவிடும் எச்.வினோத் - அடுத்த படம் யாருடன் தெரியுமா?
வலிமை இயக்குனரின் மாஸ்டர் பிளான்... AK 61 உடன் அஜித்தை கழட்டிவிடும் எச்.வினோத் - அடுத்த படம் யாருடன் தெரியுமா?
Director H Vinoth next movie : போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் AK 61 படத்தை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர்கள் பார்த்திபன், விஜய் மில்டன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர் எச்.வினோத் (H Vinoth). இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வித்தியாசமான கதையம்சத்தோடு உருவாகி இருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த எச்.வினோத், அடுத்ததாக கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கினார்.
இப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுத்தந்தது. நேர்கொண்ட பார்வை ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுத்து வெற்றி வாகை சூடினார் வினோத். இப்படத்தில் வினோத்தின் திறமையை பார்த்து வியந்துபோன அஜித் (Ajith), தனது அடுத்த படமான ‘வலிமை’ (Valimai) படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருக்கும் வலிமை (Valimai) திரைப்படம், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வரும் இப்படம் மூன்றே நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனிடையே, அஜித்தின் 61-வது படத்தையும் எச்.வினோத் (H Vinoth) தான் இயக்க உள்ளதாகவும், போனி கபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் 9-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில், AK 61 படத்தை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் யோகிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் அஜித்துடனான எச்.வினோத்தின் ஹாட்ரிக் கூட்டணி முடிவுக்கு வர உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்.... Thalapathy 66 Update : விஜய்யின் ‘தளபதி 66’ அரசியல் படமா? - அனல் பறக்கும் ஹாட் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்