MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யோஹான் படம் டிராப் ஆனா என்ன... தளபதி 67 மூலம் மீண்டும் இணையும் விஜய் - கவுதம் மேனன் கூட்டணி?

யோஹான் படம் டிராப் ஆனா என்ன... தளபதி 67 மூலம் மீண்டும் இணையும் விஜய் - கவுதம் மேனன் கூட்டணி?

Thalapathy 67 : யோஹான் படம் டிராப் ஆன பின்னர் இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த விஜய் - கவுதம் மேனன் கூட்டணி, தற்போது தளபதி 67 படம் மூலம் மீண்டும் இணைய உள்ளது

2 Min read
Author : Ganesh A
Published : Aug 16 2022, 10:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் ரொமாண்டிக் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். மாதவனின் மின்னலே படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கவுதம் மேனன், அடுத்தடுத்து சூர்யாவுடன் காக்க காக்க, கமல் உடன் வேட்டையாடு விளையாடு, சிம்பு உடன் விண்ணைத்தாண்டி வருவாயா, அஜித் உடன் என்னை அறிந்தால் என பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் கவுதம் மேனன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இவர் கடந்த 2012-ம் ஆண்டு யோஹான் என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். அப்படத்தில் விஜய் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருந்த இப்படத்தின் போஸ்டர்களெல்லாம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானதோடு மட்டுமின்றி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

35

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக அப்படத்தை பாதியிலேயே கைவிட்டுவிட்டனர். இதற்கு பதிலாக விஜய் நடித்த படம் தான் துப்பாக்கி. யோஹான் படம் டிராப் ஆன பின்னர் விஜய் - கவுதம் மேனன் கூட்டணி மீண்டும் இணையவில்லை. அவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இதையும் படியுங்கள்... வலிமை நாயகனின் எளிமை... மக்களோடு மக்களாக பேருந்தில் நின்றபடி பயணித்த அஜித் - வைரலாகும் வீடியோ

45

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த கூட்டணி தற்போது முதன்முறையாக இணைய தயாராகிவிட்டது. ஆனால் இயக்குனர் கவுதம் மேனன் விஜய்யை இயக்கப்போவதில்லை, அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க கவுதம் மேனன் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

55

கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் மொத்தம் 6 வில்லன்கள் நடிக்க உள்ளார்களாம். அதன்படி இந்தி நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிருத்விராஜ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோரது பெயர்கள் இதுவரை வெளிவந்த நிலையில், தற்போது புதுவரவாக இயக்குனர் கவுதம் மேனனும் அந்த வில்லன் லிஸ்டில் இணைந்துள்ளார். 

இதையும் படியுங்கள்... நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா... சினிமாவில் 47 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி குறித்து மகள்கள் உருக்கம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved