MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியாத விஜய்; TVK மாநாட்டில் இந்த விஷயங்களை கவனிசீங்களா?

இந்த அடிப்படை நாகரீகம் கூட தெரியாத விஜய்; TVK மாநாட்டில் இந்த விஷயங்களை கவனிசீங்களா?

தளபதி விஜய்யின் முதல் மாநாடு மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், விஜய் மாநாட்டில் பேசிய இந்த விஷயங்களை கவனித்தீர்களா? 

4 Min read
manimegalai a
Published : Oct 28 2024, 12:16 PM IST| Updated : Oct 28 2024, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Thalapathi Vijay

Thalapathi Vijay

தளபதி விஜய் துவங்கியுள்ள TVK கட்சியின், முதல் மாநாடு அக்டோபர் (27.10.2024) நேற்று மாலை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள வி சாலை என்கிற இடத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது .சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில், விஜயின் பெற்றோர் மற்றும் நடிகர் ஸ்ரீமன், சௌந்தரராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் விஜயின் கட்சியில் உள்ள செயலாளர், பொருளாளர், உள்ளிட்டவர்கள் முதல் மாநாட்டை  சிறப்பாக நடத்தி முடித்தனர். தளபதி தன்னுடைய கட்சியின் பொதுச்செயலாளர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பெயரை குறிப்பிட்டிருந்தாலும்....  இந்த பிரமாண்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததற்கு, நன்றி என கூறாதது, தளபதி விஜய் அரசியல் மற்றும் அடிப்படை நாகரீகம் கூட தெரியாதவரா? என விமர்சிக்க வைத்தது.

26
Vijay Manadu Speech

Vijay Manadu Speech

இது ஒரு புறம் இருக்க, தளபதி விஜய்யின் மாநாட்டில் அவர் பேசிய முக்கிய விஷயங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில், பிரம்மாண்ட மேடையில் தன்னுடைய பவுன்சர்களுடன் நடந்து மேடைக்கு வந்த விஜய்,  தமிழ்நாட்டில் பிறந்து.. இந்திய சுதந்திரத்திற்காக உயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் திருவுருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதற்கு முன் எத்தனையோ அரசியல் மாநாடுகள் அதிமுக சார்பிலும், திமுக சார்பிலும் நடத்தப்பட்ட போதிலும் இதுபோல் அனைவரது புகைப்படங்களையும் ஒன்று சேர வைத்து யாரும் மரியாதை செய்ததில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று.

பின்னர் 100 அடி உயர கம்பத்தில் தன்னுடைய கட்சி கொடியை ஏற்றிய பின்னர்... தமிழ் தாய் வாழ்த்து உடன் நிகழ்ச்சி துவங்கியது. கட்சியின் உறுதிமொழி ஈர்க்கப்பட்ட பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த விஜய், தன்னுடைய பெற்றோரிடம் ஆசி பெற்றார்.

இதன் பின்னர் இதுவரை யாரும் பார்த்திடாத முழு அரசியல் விஜயின் அவதாரத்தில்.. கர்ஜிக்கும் குரலுடன் தன்னுடைய உரையை துவங்கினார். தன்னுடைய அரசியல் வருகையை விமர்சிப்பவர்களுக்கு, பதிலடி கொடுக்கும் விதத்தில், அரசியல் என்ற பாம்பை கண்டு பயமில்லை.. அதை கையில் பிடித்து விளையாட போவதாக தளபதி கூறியது அரங்கத்தையே அதிர வைத்தது.

சன் டிவியில் இருந்து விலகி.. ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய சீரியல் ஹீரோயின்!

36
Vijay Political Speech

Vijay Political Speech

அரசியல் என்பது தத்துவத்தோடு ஆட வேண்டிய ஆட்டம்,  சிரிப்போட சீரியஸை கலந்து செயல்படுவது தான் நம்மளுடைய ரூட் என சில எதார்த்தமான வார்த்தைகளை பேசி அங்கு கூடி இருந்த தொண்டர்களை சிந்திக்க வைத்தார்.

அனைவரும் சமம் என்பதை உரைக்க சொன்ன விஜய், அரசியலில் மாற்றம் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, "சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் மட்டும் தான் மாற வேண்டுமா? டெவலப் ஆகணுமா? பாலிடிக்ஸ் மாற கூடாதா? டெவலப் ஆக கூடாதா? மாறனும்... இல்லை என்றால் இந்த புதிய உலகம் நம்மை மாற்றிவிடும். இங்கு எப்போதுமே மாறாதது மனித பிறப்பு, பசி, உழைப்பு, பணம், போன்ற சில விஷயங்கள் மட்டுமே. எனவே இன்னைக்கு இருக்கிற ஜெனரேஷன் பத்தி புரிந்து கொண்டால் மட்டுமே... தைரியமா ஒரு களத்தில் நிற்க முடியும். அதனால் தான் எங்களுடைய பேச்சு கூட மணிக்கணக்கில் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்தோம் என விஜய் கூறியதும்... அவரின் அணுகு முறையும் அவரின் அரசியல் களம் மீதான ஆர்வத்தை தூண்டியது".

அதே போல் புள்ளி விவரம் புலியா நாங்க கதற போறது இல்ல, வேர்ல்ட் ஹிஸ்டிரியா பத்தி mp3 ஆடியோ போல பேச போறது இல்ல, ஆல்ரெடி இருக்கிற அரசியல்வாதிகள் பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண போறதும் இல்ல, அதுக்காக மொத்தமா கண்ண மூடிக்கிட்டு இருக்க போறதும் கிடையாது. என விஜய் பேசிய பன்ச் டயலாக் வேறு லெவல் என கூறலாம்.

46
Thalapathy vijay 69th movie

Thalapathy vijay 69th movie

தன்னை அண்ணன், தம்பி, மகன் என நினைத்து பாசம் காட்டுபவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும் என  எனக்குள்ள இருக்கிற பல கேள்விகளுக்கு பதில் வேண்டும் நினைத்தபோது தான் அரசியல் என்கிற  விடை கிடைத்தது.

நிறத்தை பற்றியும், மக்களுக்கு இடையே ஏற்ற தாழ்வு பார்ப்பதாகவும்... மோடி மஸ்தான் என்கிற வார்த்தையால் பாஜகவை கொள்கை எதிரி என நேரடியாக தாக்கிய விஜய், மக்கள் விரோத ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி திமுகாவை அரசியல் எதிரி என விமர்சித்தார்.

மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து, அதற்காக தனித்துறையும், தனி இலக்காக ஏற்படுத்த வேண்டும். ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி, மருத்துவ வசதி, நல்ல குடிநீர், எல்லாருக்கும் சமமாக கிடைக்க செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என ப்ராக்டிகலாக செய்ய வேண்டிய அடிப்படை விஷயங்கள் குறித்து விஜய் பேசியது... பிரிஜ், வாஷிங் மெஷின் தருவதாக கூறும் அரசியல் வாதிகள் மத்தியில் சற்று தனித்துவமாக பார்க்கப்பட்டது என்றே கூறலாம்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் விவாகரத்து; அட்வைஸ் கொடுத்தாரா தனுஷ் பட நடிகை?

56
Vijay Political entry

Vijay Political entry

கரப்ஷன் கபடதாரிகளை ஜனநாயக போர்க்களத்தில் சந்திக்கும் நாள் வெகு தூரம் இல்லை என 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை குறிப்பிட்டு விஜய் பேசியதும் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயமாகும். 

அதே போல்  சினிமாவிற்கு உள்ளவன் வந்தபோது தன்னுடைய உருவத்தை, நிறத்தை, தோற்றத்தை வைத்து அசிங்கப்படுத்தினார்கள். என கூறி கூத்தாடி என்றால் கேவலமா? என தன்னை கூத்தாடி என விமர்சிப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக... சினிமாவில் வந்து அரசியலில் சாதித்த எம் ஜி ஆர்., என் டி ஆர் போன்ற நடிகர்களையும் & அரசியல் தலைவர்களை எடுத்துக்காட்டாக கூறினார்.

தன்னுடைய கெரியரின் உச்சத்தை உதறிவிட்டு, மக்களுக்காக அரசியலில் குதித்ததையும் இந்த மாநாட்டில் நேரடியாக பேசிய விஜய், மக்கள் தங்களுடைய வாக்குகளை TVK சின்னத்தில் போட்டு தன்னை முதல்வராக மாற்ற வேண்டும் என்பதை மாறைமுகமாக கூறியதை உணர முடிந்தது.

66
TVK Leader Vijay

TVK Leader Vijay

மேலும் இந்த மாநாட்டு மேடையில்... விஜய் கொஞ்சும் செண்டிமெண்ட் டச்சுடன்  சிறுவயதில் மரணமடைந்த தன்னுடைய தங்கை வித்யாவை நினைவு கூர்ந்து, அவர் இறந்தபோது எப்படி ஒரு வேதனை தன்னுடைய மனதில் இருந்ததோ, அதே போன்ற உணர்வு நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணத்தின் போது இருந்ததாக தெரிவித்தார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் நமது கோட்பாடு. கடவுளுக்கும், மத உணர்வுகளுக்கும் எதிரான கட்சி TVK இல்லை என ஒட்டு மொத்த மக்களையும் கவர் செய்தார் தளபதி... கடைசியாக TVK கட்சியில் வந்து இணைபவர்களை நாங்கள் அரவணைப்போம் என கூறி, கூட்டணியோடு தான் இந்த தேர்தலை சந்திக்க உள்ளத்தையும் உறுதி செய்யுள்ளார். 

கல்யாண மூடில் ரம்யா பாண்டியன்! காதலரை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் வீடியோ படு வைரல்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved