இன்று சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சூர்யா.. நடிக்க வரும்முன் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இன்று சினிமாவில் பல கோடி சம்பாதிக்கும் சூர்யா, நடிக்க வரும் முன்னர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள்.
நடிகர் சிவக்குமாரின் மகனான சூர்யா, கடந்த 1997-ம் ஆண்டு வஸந்த் இயக்கத்தில் வெளியான நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் சூர்யாவின் நடிப்பும், நடனமும் பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளானது. இருப்பினும் தனது விடா முயற்சியால் அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் மெருகேரிய சூர்யா, தற்போது நடிப்பின் நாயகனாக உயர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் ‘இவரெல்லாம் எதுக்கு நடிக்க வந்தார்’ என விமர்சித்தவர்களே, தற்போது ‘இவரைப் போன்ற சிறந்த நடிகர் இல்லை’ என சொல்லும் அளவுக்கு, சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ளார் சூர்யா. சமீபத்தில் இவரது நடிப்புக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரம் தான் தேசிய விருது. சூரரைப்போற்று படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் சூர்யா.
இதையும் படியுங்கள்... தமிழகத்தில் பிறந்து வளர்ந்து.. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் லிஸ்ட் இதோ
இவ்வாறு தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக உருவெடுத்துள்ள சூர்யா, நடிக்க வரும் முன்னர் ஜவுளித் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று சினிமாவில் பல கோடி சம்பாதிக்கும் சூர்யா, நடிக்க வரும் முன்னர் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு என தெரிந்தால் ஷாக் ஆகி விடுவீர்கள். அதனை நடிகர் சூர்யாவே ஒரு பேட்டியில் ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.
அப்போது அவர் கூறியதாவது : “என் தந்தையைப் போல் நானும் சினிமாவிற்கு வர வேண்டும் என எண்ணியதில்லை. ஜவுளி தொழிற்சாலையில் தான் முதலில் வேலை பார்த்தேன். அங்கு தினமும் 18 மணிநேரம் வேலை. அப்போது நான் பெற்ற முதல் சம்பளம் 736 ரூபாய். அதனை ஒரு வெள்ளைக்கவரில் போட்டுத் தருவார்கள் என தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்களான மர்மதேசம், ஜீ பூம் பாவில் நடித்த பிரபலம் தற்கொலை - சோகத்தில் திரையுலகினர்