முடியவே முடியாது... கமலே போன் போட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தும் வர மறுத்தாரா பிரபல நடிகர்?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல நடிகர் ஒருவரை கமலே போன் செய்து அழைத்தும்... அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் விக்ரமன் வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத விதமாக அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இதைத் தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதமே பிக்பாஸ் சீசன் 7 துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதம் துவங்கப்படவில்லை என்றும், அடுத்த மாதம் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே கமலின் புரோமோ ஷூட் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில், போட்டியாளர்கள் தேர்வில் பிக்பாஸ் குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை பல பிரபலங்களின் பெயர்கள் இந்த லிஸ்டில் அடிபட்டு வருகிறது.
விஜய் டிவி தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்குலின், பிரபல நடிகர் பப்புலு பிரிதிவிராஜ், ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், கோவையில் முதல் பெண் பஸ் ஓட்டுநரான ஷர்மிளா மற்றும் பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஆடிஷனில் பங்கேற்றதாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மிக முக்கிய பிரபலம் ஒருவரை, கமல்ஹாசனை நேரடியாக போன் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைத்ததாகவும்... அதற்கு அவர் மறுப்பு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். அவர் வேறு யாரும் அல்ல, தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்த அப்பாஸ் தான். அப்பாஸ் கமலுடன் ஹேராம் மற்றும் பமல் கே சம்பந்தம் போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பரவி வரும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை