தயவுசெஞ்சி இப்படி பண்ணாதீங்க..! கணவர் இறந்த இரண்டே நாளில் வீடியோ வெளியிட்டு குமுறிய ஸ்ருதி ஷண்முக பிரியா!

சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முக பிரியாவின் கணவர் அரவிந்த், மாரடைப்பால் ஆகஸ்ட் 2ஆம் தேதி உயிரிழந்த நிலையில், தற்போது தன்னுடைய கணவரின் இறப்பு குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என வீடியோ பதிவிட்டு குமுறியுள்ளார்.
 

Please dont spread rumors Shruti Shanmuga Priya posted emotional video

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலின் மூலம் சின்னத்திரையில் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இந்த சீரியலில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து கல்யாண பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா, போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தார். இந்நிலையில் இவர் கடத்தாண்டு சென்னையைச் சேர்ந்த சிவில் இன்ஜினியரும், ஜிம் ட்ரைனருமான அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் சேகர் கடந்த 2022 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பின்னர் சீரியல் இங்கிருந்து முழுமையாக விலகிய ஸ்ருதி ஷண்முக பிரியா தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தார். சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும், சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வபோது கணவருடன் சேர்ந்து வெளிநாடுகளுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் சில ரீல்ஸ்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

விட்ட இடத்தை பிடித்த சுந்தரி... டி.ஆர்.பி-யில் டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்த சீரியல்கள்! என்னென்ன தெரியமா?

Please dont spread rumors Shruti Shanmuga Priya posted emotional video

இந்நிலையில் அரவிந்த் சேகருக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி வீட்டில் இருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மருத்துவர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர். 30 வயதே ஆன அரவிந்த் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த போதிலும், இப்படி ஒரு துயர சம்பவம் நேர்ந்துள்ளது இதுவரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

பணம் நெருக்கடி... முன்னணி நடிகரிடமிருந்து 25 கோடி கடன் வாங்கினாரா சமந்தா?

Please dont spread rumors Shruti Shanmuga Priya posted emotional video

தன்னுடைய கணவரின் இறப்பு குறித்து இன்ஸ்ட்டாவில் ஸ்ருதி நேற்று போட்டிருந்த பதிவு வைரலான நிலையில், தற்போது வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது...  "தன்னுடைய கணவர் அரவிந்த் மரணத்திற்கு ஆறுதல் கூறும் விதமாக பலர் நேரில் வந்தும், போன் மூலமாகவும், மெசேஜ் செய்தும் ஆறுதல் கூறியதற்கு நன்றி. அரவிந்த் என்னோடு தான் இருக்கிறார் எப்போதும் எங்களோடு தான் இருப்பார்.

வீட்டில் பல சமர்தாயங்கள் இருந்தாலும் இந்த வீடியோவை நான் ஏன் போட்டுள்ளேன் என்பதை முதலில் கூறி விடுகிறேன். உண்மையில் அரவிந்தும் என்ன  நடந்தது என்பது பற்றி தெரியாதவர்கள் இதை ஒரு தகவலாக கூட எடுத்து கொள்ளலாம். ஆனால் உண்மை என்ன என்பதே தெரியாமல் சில youtube சேனல்கள்,  பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார். ஆனால் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் போது இறந்து விட்டார்... அவரின் மரணத்திற்கு காரணம்... இது... அது  என கூறுகிறார்கள் ஆனால் அப்படி வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை.

எதிர்நீச்சலை ஓரம்கட்டி கயல்..! டி.ஆர்.பி-யில் இதுவரை எந்த சீரியலும் செய்யாத சாதனை.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

Please dont spread rumors Shruti Shanmuga Priya posted emotional video

அவர் ஒரு சிவில் இன்ஜினியர், பேஷனுக்காக தான் பாடி பில்டராக இருந்தார். இப்படி வெளியாகும் தவறான தகவல்களால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாருமே வயதானவர்கள். இந்த விஷயத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் போது... தயவு செய்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார் . இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில், அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios