- Home
- Cinema
- Dhruv Vikram : ஓட்டல் அறையில் நடிகையுடன் துருவ் விக்ரம்... ஒருவேள அதுவா இருக்குமோ? - டவுட்டில் ரசிகர்கள்
Dhruv Vikram : ஓட்டல் அறையில் நடிகையுடன் துருவ் விக்ரம்... ஒருவேள அதுவா இருக்குமோ? - டவுட்டில் ரசிகர்கள்
ஓட்டல் அறையில் இருந்தபடி துருவ் எடுத்துள்ள வீடியோவில், நடிகை பனிடா சந்து இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் ஆதித்ய வர்மா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

நடிகர் விக்ரமின் மகன், துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இது தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காகும்.
'ஆதித்ய வர்மா' படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ படத்தில் நடித்து முடித்துளார் துருவ் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதன்பின்னர் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் துருவ் விக்ரம்.
இப்படத்தில் அவர் கபடி வீரராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் துருவ் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பதிவு, அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் துருவ்.
ஓட்டல் அறையில் இருந்தபடி துருவ் எடுத்துள்ள அந்த வீடியோவில், நடிகை பனிடா சந்து இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் ஆதித்ய வர்மா படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.
இதைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், ஒருவேள அவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருக்குமே என சந்தேகிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.