- Home
- Cinema
- தோனி பட நடிகர் திடீர் தற்கொலை... சுஷாந்த்தை தொடர்ந்து அவருடன் நடித்த பிரபலம் எடுத்த அதிர்ச்சி முடிவு..!
தோனி பட நடிகர் திடீர் தற்கொலை... சுஷாந்த்தை தொடர்ந்து அவருடன் நடித்த பிரபலம் எடுத்த அதிர்ச்சி முடிவு..!
நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் ரசிகர்கள் மீளாத நிலையில், அவருடன் நடித்த மற்றொரு நடிகர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் எம்.எஸ்.தோனியாக நடித்திருந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு... பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு மன அழுத்தம் காரணமாக தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்டாரா? என்கிற பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இவர் மூலமாக போதை மருந்து விற்பனை செய்யும் பிரபலங்கள் பட்டியல் வெளியாகி, இந்தவழக்கில் எதிர்பாராத திருப்பு முனையை ஏற்படுத்தியது. சுஷாந்த் சிங் காதலி உட்பட சில பிரபலங்கள் கைது செய்யப்பட்டனர்.

தற்போது சுஷாந்த் சிங்குடன், தோனி படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்த, சந்தீப் நாஹர் என்கிற பிரபலம் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகாவ்ன் பகுதியில் வசித்து வந்த சந்தீப் நேற்று தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது, இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் தற்கொலை செய்வதற்கு முன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார் சந்தீப். அதில் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும், இதன் காரணமாக மனவேதனை அடைந்து இந்த முடிவை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதே போல் தன்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் பலர் தற்கொலை என்பது பிரச்சனைகளுக்கு முடிவு இல்லை என, சோகத்துடன் நடிகர் சந்தீப்பிற்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.