MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தனுஷ் - செல்வராகவன் மோதல்.... ஆரம்பமே இப்படியா? எகிறும் எதிர்பார்ப்பு!

தனுஷ் - செல்வராகவன் மோதல்.... ஆரம்பமே இப்படியா? எகிறும் எதிர்பார்ப்பு!

தனுஷின் வாத்தி படம் ரிலீசாகும் அன்றைய தினமே, செல்வராகவன் நடித்துள்ள 'பகாசூரன்' திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 28 2023, 01:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரபல இயக்குனரும், தனுஷின் சகோதரருமான, செல்வராகவன், இதற்க்கு முன் பீஸ்ட், சாணி காகிதம், நானே வருவேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும், ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'பகாசூரன்' இந்த படம் தற்போது பிப்ரவரி  17 ம் தேதி வெளியாக உள்ளதால் தன்னுடைய தம்பியுடன் முதல் படத்திலேயே நேரடியாக மோத உள்ளார் செல்வராகவன்.

26

இந்த படத்தை ‘பழைய வண்ணாரப்பேட்டை’,  ‘திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G , ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தயாரித்துள்ளது.

ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி... பாரதி ராஜா பட ஹீரோயின் லுக்கில் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்! ஹாட் போட்டோஸ்!

36

இந்தப்  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

46

சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய,  கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

தமிழனை துரத்தி அடிக்கும் வட இந்தியர்கள்! இது தொடர்ந்தால்? பிச்சை தான் எடுக்கணும்! மதுரை முத்து எச்சரிக்கை!

56

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூக பிரச்னையை தைரியமாக பேசி வரும் மோகன் ஜி, இந்த படத்திலும் ஆக்கபூர்வமான கருத்தை முன்வைத்துள்ளார்.

66

அடுத்த மாதம், 17 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில், இதே நாளில் தான் தனுஷ் முதல் முறையாக நேரடி தெலுங்கு  படத்தில் நடித்துள்ள 'வாத்தி' படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தலைவாசல் விஜய் மகளுக்கும் தமிழக கிரிக்கெட் வீரருடன் விரைவில் டும்.. டும்.. டும்! நிச்சயம் முடிந்தது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved