அந்த மாதிரி சமயத்தில் சரக்கடிப்பேன் - ஓப்பனாக சொன்ன தனுஷ் பட ஹீரோயின் சம்யுக்தா!
Samyuktha Menon: சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை கொஞ்சம் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். இந்நிலையில், பிரபல நடிகை சம்யுக்தா மேனன் மது அருந்துவது குறித்து மிகவும் வெளிப்படையாக பேசியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon ) . அதன் பிறகு தமிழ், மலையாள படங்களில் அடுத்தடுத்து நடித்து அசத்தினார். பின்னர் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, பவன் கல்யாண் (Pawan Kalyan) ஹீரோவாக நடித்த படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்தில் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த சம்யுக்தா, இரண்டாவது படத்தில் கல்யாண் ராமுடன் இணைந்து வெற்றியைப் பதிவு செய்தார்.
கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் சம்யுக்தா:
கவர்ச்சியான வேடங்களை தவிர்த்து, தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த கூடிய வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது இவரின் கைவசம் 3-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது.
மாடர்ன் உடையை பறக்கவிட்டு.. கிளாமரில் தெறிக்கவிடும் வாத்தியின் நாயகி சம்யுக்தா!
எதையும் ஒளிவு மறைவு இன்றி பேசும் சம்யுக்தா
மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவது நடிகை சம்யுக்தாவின் பழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் சம்யுக்தா:
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் விருந்து, மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி கலந்துகொள்ளும் போது ஆல்கஹால் கூட அருந்துவதையும் நாகரீகமாக கருதுகிறார்கள். ஆனால் நடிகைகள் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். ஆனால் சம்யுக்தா பார்ட்டிக்கு போனால் சரக்கடிப்பேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
பார்ட்டியில் சரக்கடிப்பேன்
பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் விருந்து, மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி கலந்துகொள்ளும் போது ஆல்கஹால் கூட அருந்துவதையும் நாகரீகமாக கருதுகிறார்கள். ஆனால் நடிகைகள் இது போன்ற விஷயங்களை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். ஆனால் சம்யுக்தா பார்ட்டிக்கு போனால் சரக்கடிப்பேன் என வெளிப்படையாக கூறியுள்ளார்.
மன அழுத்தத்தில் இருக்கும்போது ஆல்கஹால் எடுப்பேன்
இதுகுறித்து அவர் பேசும் போது, பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது நான் ஆல்கஹால் எடுப்பேன், ஆனால் எல்லா பார்ட்டிகளிலும் அல்ல, நெருங்கிய நண்பர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மட்டுமே. அதுவும் குறைந்த அளவில் மட்டுமே ஆல்கஹால் அருந்துவேன் என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் எப்போதாவது அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போதும், அதிக டென்க்ஷனில் இருக்கும்போதும் கொஞ்சம் ஆல்கஹால் எடுப்பேன் என்று எந்த தயக்கமும் இல்லாமல் கூறியுள்ளார். இதனால் சம்யுக்தா கூறிய இந்த கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
வெளிப்படையாக கூறிய இவருக்கு குவியும் வாழ்த்து
உள்ளதை உள்ளபடி எந்த தயக்கமும் இல்லாமல் சொல்ல தைரியம் வேண்டும் என்று சிலர் சம்யுக்தாவின் இந்த கருத்துக்கு பதிலளித்து வருகிறார்கள். தற்போது தென்னிந்திய மொழிகளை கடந்து சம்யுக்தா தற்போது பாலிவுட்டில் மகாராணி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் ஸ்வயம் பூ, நாரி நாரி நடும முராரி, அகண்ட் 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.