இளையராஜா பயோபிக் என்ன ஆச்சு? சுடசுட வந்த சூப்பர் அப்டேட்
Ilaiyaraaja Biopic : தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இளையராஜா பயோபிக் படம் டிராப் ஆனதாக கூறப்பட்ட நிலையில், அதுபற்றி லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
Dhanush, Ilaiyaraaja, Kamal
தனுஷ் லைன் அப்
தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தற்போது நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பிசியாகிவிட்டார் தனுஷ். இவர் இயக்கிய ராயன் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ந் தேதியும், இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமும் திரைக்கு வர உள்ளது.
Ilaiyaraaja Biopic
இளையராஜா பயோபிக்
இதுதவிர தற்போது குபேரா என்கிற பான் இந்தியா படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதோடு, அதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க உள்ளதாகவும் அப்டேட் வெளியானது. மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த மார்ச் மாதமே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையும் படியுங்கள்... பிரேமலு ஸ்டைலில் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Ilaiyaraaja Biopic Poster
இளையராஜாவாக தனுஷ்
மேலும் இப்படத்தை கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் பிகே புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இப்படத்தை தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு, இப்படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாததாலும், எந்தவித அப்டேட்டும் வெளிவராமல் இருந்ததாலும் இளையராஜா பயோபிக் படம் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்டுத்தீ போல் பரவியது.
Ilaiyaraaja Biopic Update
இளையராஜா பயோபிக் கைவிடப்படவில்லை
இந்த நிலையில், அதுகுறித்து படக்குழுவே விளக்கம் அளித்து உள்ளது. அதன்படி இளையராஜா பயோபிக் கைவிடப்பட்டதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை என கூறியுள்ள தயாரிப்பு தரப்பு, தற்போது படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் நிச்சயம் உருவாகும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... நஷ்ட ஈடு கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கு; நயன்தாராவுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த கோர்ட்