- Home
- Cinema
- பாக்ஸ் ஆபிஸில் மொக்கை வாங்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’; டிராகன் வசூலில் பாதிகூட வரல!
பாக்ஸ் ஆபிஸில் மொக்கை வாங்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’; டிராகன் வசூலில் பாதிகூட வரல!
தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்காலம்.

Nilavuku En Mel Ennadi Kobam
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், கடந்த 2017-ம் ஆண்டு திரைக்கு வந்த பா.பாண்டி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் தப்பித்தது. பா.பாண்டி படத்துக்கு பின் சுமார் 7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்து வந்த தனுஷ், கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன ராயன் படம் மூலம் மீண்டும் இயக்குனராக கம்பேக் கொடுத்தார். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இது தனுஷின் 50வது படமாகும்.
Dhanush Directed Nilavuku En Mel Ennadi Kobam Movie
மாஸுக்கு பஞ்சமில்லாத படமாக உருவாகி இருந்த ராயன் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ராயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப்படத்தின் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் தனுஷின் அக்கா மகனான பவிஷ், இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக எண்ட்ரி கொடுத்துள்ளார். பவிஷுக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தனுஷ் இயக்கத்தில் ஹிட் கொடுத்த படங்கள் என்னென்ன? நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் எப்படி?
NEEK Movie Box Office
மேலும் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், நரேன், சரண்யா பொன்வண்ணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் பாடல் ஹிட்டானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் பிப்ரவரி 21ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது.
Nilavuku En Mel Ennadi Kobam Day 1 Box Office
தனுஷ் இயக்கிய படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் செம பல்பு வாங்கி இருக்கிறது இப்படம். விமர்சன ரீதியாகவும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருவதால் இப்படம் முதல் நாளில் ரூ.2 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் முதல் நாளில் ரூ.7.5 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்; இயக்குனராக ஹாட்ரிக் ஹிட் அடித்தாரா தனுஷ்?