தனுஷ் செய்த தரமான சம்பவம்... முதல் நாளிலேயே வலிமை, ஆர்.ஆர்.ஆர் பட வசூலை முறியடித்த திருச்சிற்றம்பலம்
Thiruchitrambalam : மலேசியாவில் மாஸான வரவேற்பை பெற்று வரும் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீசான முதல் நாளில் வலிமை, ஆர்.ஆர்.ஆர் பட சாதனைகளை முறியடித்துள்ளது.
தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியைத் தழுவின. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தனுஷ், தனது பேவரைட் இயக்குனரான மித்ரன் ஆர் ஜவகர் உடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்தார். குறிப்பாக இப்படத்தின் கதையை தனுஷ் தான் தயார் செய்திருந்தார்.
திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கும் பணிகளை மட்டும் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் மேற்கொண்டார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். அதில் நித்யா மேனன் தனுஷின் தோழியாகவும், ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் தனுஷுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தனர்.
இப்படத்தின் மற்றுமொரு ஸ்பெஷல் என்றால் அது தனுஷ் - அனிருத் காம்போ தான். கடந்த 7 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இந்த கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் இணைந்தது. இவர்கள் சேர்ந்தாலே அப்படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிடும், அதனை திருச்சிற்றம்பலம் படம் மூலம் மீண்டும் நிரூபித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... கிளாமர் உடையில் மும்பையை கலக்கிய தமன்னா...இவ்வளவு விலையா?
இப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் ரூ.9 கோடி வசூலித்து இருந்தது. குறிப்பாக இப்படத்திற்கு மலேசியாவில் மாஸான வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு ரிலீசான முதல் நாளில் வலிமை, ஆர்.ஆர்.ஆர் பட சாதனைகளை முறியடித்துள்ளது.
மலேசியாவில் இந்த ஆண்டு ரிலீசான தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற படமாக விஜய்யின் பீஸ்ட் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கே.ஜி.எஃப் 2 உள்ளது. அந்த லிஸ்ட்டில் தான் நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் படம் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் வலிமை, ஆர்.ஆர்.ஆர், டான் போன்ற படங்களின் சாதனையை இப்படம் முறியடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஏன் பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும் லவ் பண்ணகூடாதா? வைரலாகும் பா.இரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது டிரைலர்