கிளாமர் உடையில் மும்பையை கலக்கிய தமன்னா...இவ்வளவு விலையா?
இந்த உடையில் விதவிதமான போஸ் கொடுத்திருந்த தமன்னாவின் ஹாட் லுக் மனதை மயக்கும் வண்ணம் இருந்தது. வழக்கத்தை விட குறைவான கவர்ச்சி காட்டி இருந்தாலும், இந்த புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது என்று கூறலாம்.
Tamannaah
தற்போது தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் என்னும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஹிருத்திக் ரோஷன் உடன் தோன்றிய இவர் ரசிகர்களை மயக்கி உள்ளார். தமன்னாவின் சமீபத்திய படமான இதில் நாயகனாக ஹிருத்திக் ரோஷன் தான் நடித்துள்ளார்.
Tamannaah
இதன் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு நாயகன் ஹிருத்திக், கருப்பு அச்சிடப்பட்ட சட்டையுடன் உப்பர் கூல் தோற்றத்தில் வந்திருந்தார். அதேபோல தமன்னா சிவப்பு மிடியுடன் ஜொலித்திருந்தார். இந்த உடை அழகாக கட்டவுட் செய்யப்பட்டு இருந்தது. பூக்கள் போன்ற கட்டவுட் மேலும் அழகு சேர்த்தது.
மேலும் செய்திகளுக்கு...ஏன் பொண்ணும் பொண்ணும், பையனும் பையனும் லவ் பண்ணகூடாதா? வைரலாகும் பா.இரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது டிரைலர்
Tamannaah
இந்த உடையில் விதவிதமான போஸ் கொடுத்திருந்த தமன்னாவின் ஹாட் லுக் மனதை மயக்கும் வண்ணம் இருந்தது. வழக்கத்தை விட குறைவான கவர்ச்சி காட்டி இருந்தாலும், இந்த புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது என்று கூறலாம். அதோடு இந்த உடையின் விலை கிட்டத்தட்ட 32 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எனக்கு கூறப்படுகிறது. தமன்னா அணிந்ததன் காரணமாக இந்த உடையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது.
Tamannaah
தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் இங்கு உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் காரணமாக டாப் டென் நடிகைளில் ஒருவரானவர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிக எண்ணிக்கையில் படங்களை நடித்துள்ள தமன்னா தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு... அடிக்கடி மும்பைக்கு விசிட் அடிக்கும் சூர்யா... பின்னணியில் இருக்கும் ரூ.200 கோடி பிசினஸ் பற்றி தெரியுமா?
Tamannaah
தமிழில் இவரது கடைசி படம் ஆக்சன். விஷாலுடன் இந்த படத்தில் தோன்றியிருந்த தமன்னாவின் ஸ்டண்டுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. முன்னதாக ராஜமௌலியின் பாகுபலி பார்ட் 1 மற்றும் பார்ட் 2 ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை அளித்தது. இந்த படங்களில் சண்டை காட்சிகளிலும் சரி கிளாமர் காட்சிகளிலும் சரி மற்ற நடிகைகளை தூக்கி சாப்பிட்டு இருந்தார் தமன்னா.
Tamannaah
பாகுபலியை தொடர்ந்து பான் இந்தியா நாயகியான இவர் தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதன்படி பெட்ரமாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
மேலும் செய்திகளுக்கு... முதல்வர் கையால் சிறந்த விவசாயி விருது... நடிப்பை போல் விவசாயத்திலும் சாதித்து காட்டிய நடிகர் ஜெயராம்
Tamannaah
அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவருக்கு அங்கு சில வாய்ப்புகள் கிடைக்க, படங்களின் நாயகியாகவும், பாடல்களுக்கு கவர்ச்சி நடனமும் போட்டு அங்குள்ள ரசிகர்களை ஈர்த்து வருகிறார் தமன்னா.
Tamannaah
தற்போது பாப்லி பவுன்சர் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். நேரடியாக ஓடிடியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்துடன் சேர்த்து மேலும் நான்கு படங்களில் கமிட்டாகியுள்ளார் தமன்னா.
tamannah
இவர் முன்னதாக நடிகைகள் குறித்து மேடைகள் பேசியது சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. அப்போது நடிகைகளுக்கு சினிமாவுலகில் மதிப்பு கிடைக்காது. நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி கூட நடிகைகளுக்கு கொடுப்பதில்லை. பேனரில் நடிகைகளின் படங்கள் இடம்பெறுவதை பெரிய விஷயம் என பல மனக்குறைகளை கொட்டித் தீர்த்து இருந்தார் தமன்னா.