வட சென்னை 2 அறிவிப்பு முதல் தனுஷின் குட்டி ஸ்டோரி வரை... இட்லி கடை ஆடியோ லான்ச் ஹைலைட்ஸ்
Idli Kadai Audio Launch : தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹைலைட்டாக நடந்த விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Dhanush Idli Kadai Audio Movie Audio Launch
தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் இட்லி கடை. இப்படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், ஷாலினி பாண்டே என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தை டான் பிக்சர்ஸ், வொண்டர் பார் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் ஞாயிறு அன்று நடைபெற்றது. அதில் ஹைலைட்டாக நடந்த விஷயங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வடசென்னை 2 அறிவிப்பு
தனுஷ் வெற்றிமாறன் கூட்டணிக்கு எப்போதுமே மவுசு உண்டு. இவர்கள் இதுவரை இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். குறிப்பாக இவர்கள் கூட்டணியில் வடசென்னை 2 திரைப்படம் உருவாக உள்ளதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அது பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருவருமே சைலன்டாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் இட்லி கடை ஆடியோ லாஞ்சில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வடசென்னை 2 திரைப்படத்தை தான் தயாரிக்க உள்ளதாகவும் அதன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தனுஷ் பேசியது என்ன?
இட்லி கடை ஆடியோ லான்ச்சில் ஹேட்டர்ஸ் பற்றி தனுஷ் பேசுகையில், அப்படி யாருமே கிடையாது. எல்லாரும் எல்லா படங்களையும் பார்ப்பாங்க. ஒரு குழு 300 ஐ.டி. வைத்து பரப்புறதுதான் ஹேட். அவங்களும் படத்தை பார்க்குறாங்க. கிரவுண்ட் ரியாலிட்டி வேறே எனக் கூறினார்.
நான் நடிக்கிற படங்களை திரையரங்குகளில் பாருங்க, மற்ற நேரங்களில் உங்க குடும்பத்தை கவனிச்சுக்கோங்க. இப்போலாம் நான் சந்திக்கிற என் ரசிகர்கள்ல நிறைய பேர் மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும் வழக்கறிஞர்களாக இருக்காங்க. இதைக் கேட்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுதான் நான் உண்மையாகவே விரும்புகிறேன்.
“நாம கொஞ்சம் சுமாரான முகம்... சில ஹேர் ஸ்டைல் மட்டும்தான் நமக்குப் பொருந்தும். ஆனால், பசங்களுக்கு இது பிடிச்சிருந்தா, நாம மறுபடியும் முயற்சி செய்யலாம். லிங்காவை சுட்டிக்காட்டி அவரோட ஃபங்க் ஸ்டைலை பாருங்க,” என்று தனுஷ் கூறினார்.
துரோகம் செய்யும் கேரக்டரில் நடிக்க மாட்டேன்
தொடர்ந்து பேசிய தனுஷ், இசையின் போக்கு இப்போது மாறிவிட்டது. இப்போது கோடிக்கணக்கான பாடல்கள் நம் கைகளில் உள்ளன. ஒரு பாடலை ரசிக்க 10 வினாடிகள் மட்டுமே உள்ளன. அதனால், நாம் தரமான இசையை வழங்க வேண்டும். சாய் அபயங்கர், நீங்கள் சிறப்பாகச் செய்கிறீர்கள். தயவுசெய்து நல்ல மெலடிகளை கொடுங்கள்.
எனக்கு ஜி.வி. பிரகாஷ் மாதிரி ஒரு நண்பன் கிடைச்சது ஒரு பெரிய வரம். ரீல்ஸ்களுக்காக மட்டும் பாடல் பண்ண மாட்டேன்னு அவர் உறுதியா இருக்காரு. நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் மெலடிகளைதான் உருவாக்கணும்னு ஆசை. ட்ரெண்டியான பாடல்களை எல்லாராலும் உருவாக்க முடியும்... ஆனால், இந்த மாதிரி பாடல்களை உருவாக்க தைரியம் தேவை என கூறினார்
இதையடுத்து பேச வந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தனுஷ் இயக்கினால் `துள்ளுவதோ இளமை 2'-ல் நான் நடிக்க ரெடி; ஆனால், அவருக்கு துரோகம் செய்யும் கேரக்டரில் நடிக்க மாட்டேன்; அதனால் தான் ராயனில் நடிக்கவில்லை என கூறினார்.
தனுஷ் சொன்ன குட்டி ஸ்டோரி
மேலும் இட்லி கடை படத்தின் கதை உருவானதன் பின்னணியில் உள்ள குட்டி ஸ்டோரியையும் கூறினார் தனுஷ். அதுபற்றி அவர் பேசியதாவது : சிறுவயதில் தினமும் இட்லி சாப்பிட ஆசைப்பட்டேன், ஆனால் அதற்கான வசதி அப்போது இல்லை. என் ஊரில் உள்ள இட்லி கடையில் இரண்டு இட்லி சாப்பிட கூட என்னிடம் காசு இருக்காது. அதனால் அங்கு அருகே உள்ள பூந்தோட்டத்தில் சென்று பூ பறித்துக் கொடுப்பேன். 2 மணி நேரம் பூ பறித்து கொடுத்தால் இரண்டரை ரூபாய் கொடுப்பார்கள். அந்த ரூபாய் கிடைத்த சந்தோஷத்தில் பம்பு செட்டில் குளித்துவிட்டு நேராக இட்லி கடைக்கு சென்று ஐந்து இட்லி வாங்கி சாப்பிடுவேன். அப்போ கிடைச்ச சுவையும் மகிழ்ச்சியும், இப்போது உள்ள பல பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் எனக்கு கிடைப்பதில்லை. என்னுடைய சிறுவயது நினைவுகளால் ஈர்க்கப்பட்டுதான் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது என தனுஷ் தெரிவித்தார்.