நடிகர் அஜித்தால் தனுஷின் இட்லி கடைக்கு வந்த சிக்கல்!
தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்திற்கு நடிகர் அஜித்தால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
Good Bad Ugly vs idly kadai
நடிகர் தனுஷ் ஹீரோவாக மட்டுமின்றி இயக்குனராகவும் கலக்கி வருகிறார். அவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன ராயன் திரைப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்தது. ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் இட்லி கடை என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
Idly kadai
இட்லி கடை திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து இந்த சூப்பர் ஹிட் காம்போ இட்லி கடை படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் உடன் ராஜ்கிரண், அருண் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதையும் படியுங்கள்... தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
Idly kadai Release Update
இட்லி கடை படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று புத்தாண்டு ஸ்பெஷலாக இப்படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. அதில் தனுஷ் யங் லுக்கில் ராஜ் கிரண் உடன் இருக்கும் போஸ்டர் ஒன்றும், தனுஷ் இட்லி கடை வியாபாரியாக இருக்கும் போஸ்டர் ஒன்றும் இடம்பெற்று இருந்தன.
Good Bad Ugly Release Date
இந்நிலையில், தனுஷின் இட்லி கடை படத்துக்கு அஜித்தால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இட்லி கடை படத்துக்கு போட்டியாக அஜித்தின் குட் பேட் அக்லி படமும் திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவது உறுதி என்பதை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் உறுதி செய்துள்ளார். ஆனால் தேதியை அறிவிக்கவில்லை. அநேகமாக தமிழ் புத்தாண்டு விடுமுறையில் தான் அப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சி விலகியதும் விறுவிறுவென பொங்கல் ரேஸில் குதித்த 10 படங்கள் - முழு லிஸ்ட் இதோ