காதலித்து திருமணம் செய்த நடிகையை விவாகரத்து செய்யும் தனுஷ் பட பிரபலம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
பிரபல மலையாள நடிகையும், முன்னணி ஒளிப்பதிவாளரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகை ஆன் அகஸ்டின் மற்றும், பிரபல ஒளிப்பதிவாளர் ஜாமோன் ஜான் ஆகியோர் கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை ஆன், மறைந்த மலையாள நடிகர் அகஸ்டினின் மகள் ஆவர். அதே போல், ஒளிப்பதிவாளர் ஜாமோன் ஜான் இந்தி, தமிழ், மலையாளம் போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நீ - நா என்கிற மலையாள படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு திருமணம் ஆகி, 6 வருடம் ஆகும் நிலையில்... கடந்த ஒரு வருடமாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்த்து வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது ஒளிப்பதிவாளர் ஜாமோன் ஜான் குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம் நடிகை ஆன் அகஸ்டினை பிப்ரவரி 9 ஆகும் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமண வாழ்க்கையில் இணைந்த பிரபலங்கள் தற்போது விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை நாடியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷின், 'எனை நோக்கி பாயும் தோட்டா', படத்தை ஒளிப்பதிவு செய்துள்ள இவர், தற்போது இந்தி திரைப்படமான சர்க்கஸ் என்ற திரைப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.