- Home
- Cinema
- Rolex சூர்யாவை போல் விஜய் படத்தில் கெத்தான வில்லன் வேடம் ஏற்கும் தனுஷ்... அதுவும் இவர் டைரக்ஷன்லயா?
Rolex சூர்யாவை போல் விஜய் படத்தில் கெத்தான வில்லன் வேடம் ஏற்கும் தனுஷ்... அதுவும் இவர் டைரக்ஷன்லயா?
Dhanush : விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபத்திரம் போன்று பவர்புல்லான வில்லன் வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் 4-வதாக இயக்கிய படம் விக்ரம். கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் சூர்யா, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, காயத்ரி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
கடந்த ஜூன் 3-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யா மற்றும் இப்படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கினார் கமல்.
விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இருவரும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளனர். ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபத்திரம் போன்று தனுஷுக்கு பவர்புல்லான வில்லன் வேடத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் நடிகர் விஜய்யுடன் தனுஷ் நடிக்கும் முதல் படமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Priyanka Deshpande : திடீரென வளைகாப்பு போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா - குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.