- Home
- Cinema
- Priyanka Deshpande : திடீரென வளைகாப்பு போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா - குவியும் வாழ்த்துக்கள்
Priyanka Deshpande : திடீரென வளைகாப்பு போட்டோ போட்டு குட் நியூஸ் சொன்ன பிரியங்கா - குவியும் வாழ்த்துக்கள்
Priyanka Deshpande : சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா, வளைகாப்பு போட்டோ போட்டு ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, பிக்பாஸ் ஜோடிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் தாமரைச் செல்வியுடன் சண்டை போட்டது, நிரூப் உடன் மோதலில் ஈடுபட்டது என பல்வேறு சர்ச்சைகளில் இவர் சிக்கினாலும், இறுதிப்போட்டி வரை முன்னேறி, டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார். பிக்பாஸுக்கு பின்னர் அவர் தொடர்ந்து தனது தொகுப்பாளினி வேலையை செய்து வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த விருது நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து வழங்கினார் பிரியங்கா. அதில் இவரும், தீனாவும் சேர்ந்து பிரபலங்களுடன் செய்த ஃபன்னான சில வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு பிரியங்கா குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார்.
அதன்படி பிரியங்காவின் தம்பி ரோகித்தின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதாம். அதனை அறிவிக்கும் விதமாக ரோகித் மனைவியின் வளைகாப்பு நிகழ்வில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ‘ஆண்டி கிட்ட வா மா’ என பதிவிட்டு, பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார் பிரியங்கா. இதைப்பார்த்த ரசிகர்களோ நீங்க எப்போ குழந்தை பெத்துக்க போறீங்க என கமெண்ட் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Shah Rukh Khan : அது எப்படி 4 நாள்ல கொரோனா சரியாகும்? நயன் திருமணத்திற்கு வந்து சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.