ஒரு மாசத்துக்குள்ள ஓடிடிக்கு பார்சல் கட்டப்பட்ட தனுஷின் குபேரா!
Kuberaa OTT Release Date Announced : தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் வெளியாகி இன்னும் முழுவதும் ஒரு மாதம் ஆவதற்குள்ளாக ஓடிடிக்கு பார்சல் கட்டப்பட்டுள்ளது.

குபேரா ரிலீஸ் தேதி
Kuberaa OTT Release Date Announced : தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகழக்கூடிய தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் குபேரா. தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, கே பாக்யராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் இந்தப் படம் வெளியானது. கிட்டத்தட்ட 132 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடி படமாக வெளியானது. மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
குபேரா அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி ரிலீஸ்
கடந்த மாதம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் தமிழ் சினிமாவில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவுடன் ஒப்பிடுகையில் தமிழ் சினிமாவில் குறைவான வசூல் குவித்தது. முதல் தமிழகத்தில் ரூ.4.5 கோடி வசூல் குவித்த குபேரா தெலுங்கு சினிமாவில் முதல் நாளில் ரூ.10 கோடி வசூல் குவித்தது என்று சாக்னிக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குபேரா ரிலீஸ் தேதி
இதே போன்று 2ஆவது நாளில் தமிழில் ரூ.4.65 கோடி வசூல் குவித்த குபேரா ரூ.11.5 கோடி வசூல் குவித்தது. இதே போன்று 3ஆவது நாளிலும், தமிழில் ரூ.4.5 கோடியும், தெலுங்கு சினிமாவில் ரூ.17.35 கோடியும், 4 ஆவது நாளில் ரூ.1.6 கோடியும், தெலுங்கு சினிமாவில் ரூ.4.95 கோடியும் வசூல் குவித்தது.
தனுஷ் குபேரா ரிலீஸ்
இப்படி நாளுக்கு நாள் தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் குபேரா அதிக வசூல் குவித்தது. மொத்தமாக தமிழ் சினிமாவில் ரூ.20.55 கோடி வசூல் குவித்த குபேரா தெலுங்கு சினிமாவில் ரூ.63.9 கோடி வசூல் குவித்தது. இந்தியா முழுவதும் 101.8 கோடி வசூல் குவித்த குபேரா உலகளவில் ரூ.31.2 கோடி வசூல் குவித்தது. இதன் மூலமாக உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குபேரா ரூ.133 கோடி வசூல் குவித்திருக்கிறது. ஆனால், இது குறித்து குபேரா படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.
குபேரா ரிலீஸ் தேதி
இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பின் மற்ற எந்த படங்களிலும் இல்லாத ஒரு வகையில் இருந்தது. இது தனுஷிற்கு 2ஆவது தெலுங்கு படம். இந்தப் படத்திற்காக தனுஷிற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனுஷின் குபேரா ஓடிடி ரிலீஸ்
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் 54ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் D54 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். பிரேமலு படம் மூலம் அறிமுகமான மமிதா, தற்போது தமிழில் விஜய்யின் ஜனநாயகன், சூர்யாவுடன் வெங்கி அட்லூரி படம், விஷ்ணு விஷால் ஜோடியாக இரண்டு வானம் போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது D54 படம் மூலம் முதன்முறையாக தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தனுஷின் நண்பர் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைக்க உள்ளார்.
இந்த நிலையில் தான் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குபேரா படம் வரும் 18ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் ஒரு மாதம் முழுவதும் நிறைவடைவதற்கு முன்னதாக அமேசான் பிரைம்வீடியோவில் வெளியாக இருக்கிறது.