- Home
- Cinema
- OTTயில் ரிலீஸ் ஆன இட்லி கடை படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு? மதராஸியை முந்தியதா?
OTTயில் ரிலீஸ் ஆன இட்லி கடை படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு? மதராஸியை முந்தியதா?
தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம் இன்று முதல் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் நிலையில், அதன் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Idli Kadai OTT Release
தனுஷ் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'இட்லி கடை'. 'ப. பாண்டி', 'ராயன்', 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என தனுஷ் இதற்கு முன் இயக்கிய மூன்று படங்களுக்கு வெவ்வேறு கதைக்களத்தை கொண்டு உருவாகி இருந்தன. அதேபோல் இட்லி கடை படமும் அவர் முதன்முறையாக கிராமத்து கதையம்சத்தில் உருவாக்கி இருந்தார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் தான் இட்லி கடை படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.
இட்லி கடை படத்தின் வசூல்
ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியானது. ரிலீஸ் ஆன முதல் நாளே இந்தியாவில் மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ.71.27 கோடி வசூலித்து ஹிட் ஆனது. ஆனால் இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் மதராஸி பட வசூலை முந்தவில்லை. அப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
ஓடிடி ரிலீஸ்
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் பெரும்பாலும் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தன. ஆனால் இட்லி கடை படம் அந்த மைல்கல்லை எட்ட முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் தான். அப்படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆனதால் இட்லி கடை படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் சோபிக்கவில்லை. தியேட்டரில் வெற்றிநடைபோட்ட இட்லி கடை திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது.
5 மொழிகளில் வெளியீடு
இட்லி கடை திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜி.கே மேற்கொண்டுள்ளார். இப்படம் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இரண்டாவது வெற்றிப்படம் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன குபேரா திரைப்படம் வெற்றிபெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.135 கோடி வசூலையும் வாரிக்குவித்திருந்தது.