- Home
- Cinema
- ஐஸ்வர்யா சொன்ன அதே காரணத்தை கூறி வழக்கில் இருந்து விலக்கு கேட்ட தனுஷ் - அதிரடி உத்தரவு பிறப்பித்தது ஐகோர்ட்
ஐஸ்வர்யா சொன்ன அதே காரணத்தை கூறி வழக்கில் இருந்து விலக்கு கேட்ட தனுஷ் - அதிரடி உத்தரவு பிறப்பித்தது ஐகோர்ட்
Dhanush : வேலையில்லா பட்டதாரி பட வழக்கில் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி அதிகளவில் இடம்பெற்று இருக்கும். இதனால் இப்படத்தில் விதிகளை மீறி புகைப்பிடிக்கும் காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்களும் உரிய முறையில் இடம்பெறவில்ல என புகார் எழுந்தது.
இதையடுத்து இதுதொடர்பாக தனுஷ் மீதும், தயாரிப்பி நிறுவனம் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் மீது சைதாப்பேட்டை கோர்ட்டில் புகார் அளித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... மெரினாவில் ரொமான்ஸ்... 7 வருஷம் டேட்டிங் - முதன்முறையாக உதயநிதி உடனான லவ் ஸ்டோரியை சொன்ன கிருத்திகா
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை கோர்ட் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், இதன் விசாரணைக்கு தடை கோரியும், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ஐஸ்வர்யா கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஐஸ்வர்யாவுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது இதே கோரிக்கையுடன் நடிகர் தனுஷும் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், விசாரணைக்காக சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... சர்ச்சைக்கு உள்ளான மஹா.. இரண்டே வாரத்தில் ஓடிடி -க்கு வரும் ஹன்சிகாவின் படம்