ரோல்ஸ் ராய்ஸ் கார்; ரூ.150 கோடிக்கு வீடு என அசுர வளர்ச்சி கண்ட ‘சுள்ளான்’ தனுஷின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா?
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Dhanush
தமிழ் சினிமாவின் தங்கமகன் தனுஷ், இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஆல் ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். இவரின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு, சினிமாவுக்காக தன் பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டார். ஒல்லியான உடம்புடன் சுமார் மூஞ்சி குமார் போல இருக்கும் இவரெல்லாம் ஹீரோவா என ஆரம்ப காலகட்டத்தில் தனுஷ் எதிர்கொள்ளாத விமர்சனங்களே இல்லை. அன்று விமர்சித்தவர்களை தன்னுடைய நடிப்பு திறமையால் மிரள வைத்த அசுரன் தான் தனுஷ்.
Dhanush
கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என தன் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே சென்ற தனுஷ், இன்று உலகளவில் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். இப்படி சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட தனுஷ், இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றியும் அவரின் சம்பள விவரம் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Dhanush
கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு கடந்தாண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட தகவலின்படி ரூ.160 கோடி, ஆனால் அதன்பின்னர் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டதால் தற்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.200 கோடியை தாண்டி இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தெறிக்கும் தோட்டாக்களுக்கு நடுவே வெறித்தனமாக தனுஷ்! வெளியானது 'கேப்டன் மில்லர்' டீசர்!
Dhanush
நடிகர் தனுஷுக்கு ஏற்கனவே ஆழ்வார்பேட்டையில் ரூ.18 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு உள்ள நிலையில், அண்மையில், அவர் சென்னையின் பணக்கார ஏரியாவான போயஸ் கார்டனில் தன்னுடைய கனவு இல்லத்தை கட்டினார். நீச்சல் குளம், தியேட்டர், உடற்பயிற்சி கூடம் என சகல வசதியும் கொண்ட அந்த வீட்டின் மதிப்பு ரூ.150 கோடியாம்.
Dhanush
நடிகர் தனுஷ் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர் என்பது அவரிடம் உள்ள கார் கலெக்ஷன்களை வைத்தே சொல்லிவிடலாம். இவரிடம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஜாகுவார் XE, ரூ.98 லட்சம் மதிப்புள்ள ஃபோர்ட் மஸ்டாங்க், ரூ.3.5 கோடி மதிப்புள்ள பெண்ட்லி, ரூ.6.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ரூ.1.65 கோடி மதிப்புள்ள ஆடி A8, ரூ.1.42 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S-Class என பல விதமான ஆடம்பர கார்கள் உள்ளன.
Dhanush
நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு மொழிகளில் நடித்து வருவதால் இவருக்கான சம்பளமும் படத்துக்கு படம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர் ஒரு படத்துக்கு ரூ.30 முதல் ரூ.35 கோடி வரை வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி அவர் தன்னுடைய ஒண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து அதன்மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'D51'! போஸ்டருடன் வெளியான அதிகார பூர்வ தகவல்!