Asianet News TamilAsianet News Tamil

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'D51'! போஸ்டருடன் வெளியான அதிகார பூர்வ தகவல்!

நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள D51 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

Dhanush D51 movie officially announced
Author
First Published Jul 27, 2023, 7:08 PM IST

நடிகர் தனுஷ், சமீபத்தில் தான் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து முடித்த நிலையில், அடுத்ததாக தன்னுடைய 51 ஆவது படத்திற்காக, இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார். இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தர், மற்றும் திரையரங்கு அதிபருமான நாராயண் தாஸ் கே. நாரங் பிறந்தநாளை முன்னிட்டு, தனுஷின் 51வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.   

Dhanush D51 movie officially announced

மருத்துவர் கூறிய அதிர்ச்சி தகவல்? கண்ணாடி பொட்டிக்கு சொல்லிடவா என கேட்ட கரிகாலன்! 'எதிர்நீச்சல்' அப்டேட்!

தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படத்தை, சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பல மொழிகளில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளார் இருக்கிறது. சோனாலி நாரங் இந்த படத்தை வழங்குகிறார். 

Dhanush D51 movie officially announced

விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனின் வருங்கால மனைவி யார் தெரியுமா? வெளியான தகவல்!

#D51 தயாரிப்பாளர்கள் இந்தப்படத்திற்கான கான்செப்ட் போஸ்டர் ஒன்றை தனுஷின் பிறந்தநாளன்று (ஜூலை-28) வெளியிட உள்ளனர். இந்த படத்தில் இதுவரை முன்னெப்போதும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கும் இந்தப்படத்திற்காக மிகப்பொருத்தமான கதையை தயார் செய்துள்ளார் இயக்குனர் சேகர் கம்முலா. மேலும் இந்தப்படத்தில் பங்குபெற உள்ள இன்னும் சில மிகப்பெரிய பிரபலங்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios