மீண்டும் இணையும் கர்ணன் கூட்டணி! மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
தனுஷும் மாரி செல்வராஜும் இணைந்த கர்ணன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

Dhanush's new film directed by Mari Selvaraj - Poster released : இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், பா.இரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், அடுத்தடுத்து இயக்கிய கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார்.
Mari Selvaraj
மாரி செல்வராஜ் படத்தை ரிஜெக்ட் செய்த ரஜினி
இதையடுத்து மாரி செல்வராஜ் யார் படத்தை இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இதனிடையே அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி இருந்தார். இதனால் ரஜினி உடன் மாரி செல்வராஜ் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அப்படத்தில் ரஜினி நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் கார்த்தி உடன் மாரி செல்வராஜ் இணைய உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அந்த படத்தையும் அவர் அடுத்ததாக எடுக்கப்போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தில் இணைந்த தனுஷ்!
D56 Movie
மீண்டும் இணையும் தனுஷ் - மாரி செல்வராஜ்
ஏனெனில் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தனுஷின் 56-வது படமாக உருவாக உள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இது தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாகும். இதற்கு முன்னர் இவர்கள் காம்போவில் வெளியான கர்ணன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
Dhanush Movie Lineup
தனுஷ் கைவசம் உள்ள படங்கள்
நடிகர் தனுஷ் கைவசம் ஏற்கனவே அரை டஜன் படங்கள் உள்ளது. அவர் தற்போது இட்லி கடை என்கிற திரைப்படத்தை இயக்கி, அதில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் நடித்துள்ள குபேரா திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. மேலும் இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதுதவிர விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக மாரி செல்வராஜ் படமும் இணைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரே அடியாக தள்ளிவைக்கப்பட்ட தனுஷின் இட்லி கடை - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு