அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தில் இணைந்த தனுஷ்!
அருண் விஜய் ஹீரோவாக நடித்து வரும் ரெட்ட தல திரைப்படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். அப்படத்தின் தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Dhanush sung A Song In Arun Vijay Retta Thala Movie : தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது இட்லி கடை திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் செய்ய இருந்த நிலையில், ஷூட்டிங் நிறைவடையாததால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்படம் வருகிற அக்டோபர் மாதம், 1ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை தொடர்ந்து இந்தி படமொன்றில் நடித்து வருகிறார் தனுஷ். அதன் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Dhanush joins in Retta Thala Movie
ரெட்ட தல படத்தில் தனுஷ்
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் கலக்கி வரும் தனுஷ், நிற்க கூட நேரம் இன்றி கைவசம் அரை டஜன் படங்களோடு பிசியாக நடித்து வருகிறார். இந்த பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் பாடல் ஒன்றையும் பாடி இருக்கிறார் தனுஷ். அதுவும் அவர் படத்திற்காக அல்ல, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல படத்திற்காக. அப்பாடலுக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். மனம்கவரும் ரொமாண்டிக் பாடலாக இது உருவாகி இருக்கிறதாம்.
இதையும் படியுங்கள்... இரு வேடங்களில் அருண் விஜய்.. விறுவிறுப்பான படப்பிடிப்பில் "ரெட்ட தல" - படக்குழு தந்த லேட்டஸ்ட் அப்டேட்!
Dhanush sing Romantic Song in Retta Thala
தனுஷ் - அருண் விஜய் நட்பு
நடிகர் தனுஷ், அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடியதன் பின்னணியில் ஒரு அழகிய நட்பும் உள்ளது. அருண் விஜய் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அப்படத்தில் பணியாற்றிய போது இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அந்த நட்பின் வெளிப்பாடாக, அருண் விஜய் கேட்டதும், அவருக்காக ஓடோடி வந்து ரெட்ட தல படத்தில் பாடல் ஒன்றை பாடிக் கொடுத்துள்ளார் தனுஷ்.
RettaThala
ரெட்ட தல படக்குழு
ரெட்ட தல திரைப்படத்தை கிருஷ் திருக்குமரன் இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தை பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. விரைவில் இப்படம் திரைக்கு வரவும் தயாராக உள்ளது. இதில் பாலாஜி முருகதாஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... என்னது ‘ரெட்ட தல’ அஜித் டிராப் பண்ண படமா? 10 ஆண்டு காத்திருந்து கைவிட்ட இயக்குனர் - அருண் விஜய் சொன்ன சீக்ரெட்