விவாகரத்துக்கு பிறகு முதல் முறையாக மகனுக்காக இணைந்த தனுஷ் – ஐஸ்வர்யா: வைரலாகும் போட்டோஸ்!
Dhanush and Aishwarya Rajinikanth Son Yatra School Graduation : விவாகரத்து ஆன பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவிற்காக முதல் முறையாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விவாகரத்துக்கு பிறகு ஒன்று சேர்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Dhanush and Aishwarya Rajinikanth Son Yatra School Graduation : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். சினிமாவில் நடிக்க வந்து குறுகிய காலத்திலேயே ரஜினியின் மருமகனாகவும் ஆனார். ஆம், அவரது மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணமும் செய்து கொண்டார். கடந்த 2002 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
யாத்ராவிற்கு சான்றிதழ் வழங்கும் விழா - தனுஷ், ஐஸ்வர்யா பங்கேற்பு
இதைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று 2 மகன்கள் பிறந்தனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தனுஷ் மனுதாக்கலும் செய்தார். 2 ஆண்டுகள் இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி தான் இவர்களுக்கு முறைப்படி விவாகரத்தும் வழங்கப்பட்டது.
யாத்ரா பள்ளிப்படிப்பு நிறைவு
விவாகரத்துக்கு பிறகு தனுஷ் பட வேலைகளில் பிஸியாக இருந்தார். இதே போன்று ஐஸ்வர்யாவும் யோகா, ஜிம் ஒர்க் அவுட் ஆகியவற்றில் தனது கவனம் செலுத்தினர். இதற்கிடையில் கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இந்த நிலையில் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப்படிப்பை நிறைவு செய்த நிலையில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் இருவரும் முதல் முறையாக ஒன்றாக கலந்து கொண்டனர்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இது தொடர்பான புகைப்படத்தை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பெருமைமிக்க பெற்றோர் என்று கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது திருமண விவாகரத்துக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது இதுவே முதல் முறையாகும்.
யாத்ரா கண்ணா - ரஜினிகாந்த் வாழ்த்து
சென்னையிலுள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் யாத்ரா தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் இருக்கும் அமெரிக்கன் இன்டர்நேஷ்னல் பள்ளியில்தான் தனது பள்ளி படிப்பை யாத்ரா முடித்து உள்ளார்.
தனது படிப்பை முடிவு செய்த பிறகு நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில்தான் தனுஷும் ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த ரஜினிகாந்த் முதல் மைல்கல்லை தனது அன்பான பேரன் தாண்டிவிட்டார். வாழ்த்துக்கள் யாத்ரா கண்ணா என்று குறிப்பிட்டுள்ளார்.