- Home
- Cinema
- நயன்தாரா, சாய் பல்லவி எல்லாம் ஓரம்போங்க; இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான்!
நயன்தாரா, சாய் பல்லவி எல்லாம் ஓரம்போங்க; இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான்!
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக சாய் பல்லவி மற்றும் நயன்தாரா இருந்த நிலையில், தற்போது அவர்களை முன்னணி நடிகை ஒருவர் முந்தி உள்ளார்.

Actress Who Got 20 Crore Salary Per Film
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்துள்ளார். தற்போது, தனது சினிமா வாழ்க்கையில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் சாதனை படைத்துள்ளார். பிரபாஸை நாயகனாகக் கொண்டு அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க தீபிகாவுக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங்கை விட அதிக சம்பளம் இது.
ஸ்பிரிட் பட நாயகி தீபிகா படுகோனே
சமீபத்திய பல வெற்றிப் படங்களில் நடித்ததால் தீபிகாவின் சம்பளம் அதிகரித்துள்ளது. பிரபாஸ், சந்தீப் ரெட்டி வாங்கா, தீபிகா படுகோனே ஆகியோர் இணைவதால் 'ஸ்பிரிட்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இது பிரபாஸின் 25-வது படமாகும். சந்தீப் ரெட்டி வாங்காவும் பிரபாஸும் முதன்முறையாக இணையும் இந்தப் படம் ஒரு போலீஸ் கதை. இந்தப்படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பேக் கொடுக்க தயாராகும் தீபிகா படுகோனே
அதிரடி காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று தெலுங்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு வெளியான 'சிங்கம் அகெய்ன்' தான் தீபிகாவின் கடைசி படம். அதற்கு முன்னதாக ஷாருக்கானின் 'ஜவான்' படத்திலும் நடித்திருந்தார் தீபிகா படுகோனே. இவருக்கு கடந்த ஆண்டு தான் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் கடந்த சில மாதங்களாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த தீபிகா படுகோனே, ஸ்பிரிட் படம் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார்.
அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆனார் தீபிகா படுகோனே
தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சாய் பல்லவி இருந்து வருகிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவரை மிஞ்சும் வகையில் தெலுங்கு படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ரூ.16 கோடி சம்பளம் கேட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர்கள் இருவரையும் மிஞ்சும் வகையில், ரூ.20 கோடி சம்பளம் வாங்கி, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் தீபிகா படுகோனே.