- Home
- Cinema
- நாலு பேய் - நாலாயிரம் பிரச்சனை; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!
நாலு பேய் - நாலாயிரம் பிரச்சனை; டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!
காமெடி நடிகராக இருந்து, கதாநாயகனாக மாறி இருக்கும் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி'
சமீப காலமாக காமெடி நடிகர்களாக நடிக்கும் நடிகர்கள், அடுத்தடுத்து கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் வடிவேலு 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தார். அடுத்தடுத்து ஒரே மாதிரியான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்த வடிவேலுவுக்கு மற்ற ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் கைகொடுக்காத நிலையில், தற்போது மீண்டும் காமெடி ரோலுக்கே திரும்பி உள்ளார். மேலும் குணசித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
Dhilluku Dhuddu
'தில்லு துட்டு':
இவரை தொடர்ந்து கதாநாயகனாக மாறியவர்தான் சந்தானம். கதாநாயகனாக நடிக்க துவங்கிய பின்னர், காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கும் சந்தானம், 2016 ஆம் ஆண்டு நடித்த திரைப்படம் தான் 'தில்லு துட்டு'. இந்த படத்தை சந்தானமே தயாரித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2023 ஆம் ஆண்டு டிடி ரிட்டன்ஸ் என்கிற பெயரில் வெளியானது. சதீஷ் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மெர்சலான ‘கிஸா 47’ பாட்டு வந்தாச்சு
Arya Produced Movie:
நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார்:
சந்தானம் ஹீரோவாக நடித்த அடுத்த.. அடுத்த.. படங்கள் ஏற்ற இறக்கங்களை சந்தித்த போதிலும், ஹாரர் கான்செப்ட்டை குறிவைத்து வெளியான டிடி சீரிஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள நிலையில், இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி சங்கர், நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், ராஜேந்திரன், லொள்ளு சபா ஜீவா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார்.
DD Next Level Movie:
டிடி நெக்ஸ்ட் லெவல்:
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், மே 16ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக நடிகர் சந்தானம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு அப்ரோ என்பவர் இசையமைக்க, தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
DD Returns:
நாலு பேய்.. நாலாயிரம் பிரச்சனை:
மேலும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நாலு பேய்.. நாலாயிரம் பிரச்சனை என்கிற கேப்ஷனோடு, டிடி டபுள் டோர்ஸ் ஆஃப் என்டர்டெயின்மென்ட் உங்கள் அபிமான திரை அரங்குகளில் என பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் இந்த படத்தின் இசை, ட்ரைலர் ஆகிவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.