நீங்காத புன்னகையுடன்... சல்வாரில் சிறகடிக்கும் பிரியா பவானி ஷங்கர்..!! கும்முனு இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..
நடிகை பிரியா பவானி ஷங்கர் கலக்கலாக சல்வாரில், நீங்காத புன்னகையோடு, கும்முனு மாறி, அழகில் தெறிக்கவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள், இது எல்லாம் பழைய கதை.
தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.
அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டு சுமார் அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ளார் பிரியா பவானி ஷங்கர்.
'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடிக்கும் போது, கொழுக்கு மொழுக்கு அழகியாக இருந்த பிரியா பவானி, பட வாய்ப்புகளை குவிய துவங்கிய பின்பு தன்னுடைய உடல் எடையை பாதியாக குறித்து, செம்ம ஸ்டைலிஷ் அண்ட் ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார்.
அவ்வப்போது இளம் ரசிகர்களை, ஈர்க்கும் விதமாக விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது செம்ம சிம்பிள் அண்ட் கியூட்டாக, சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கொள்ளை அழகில் மிளிர்கிறார்.
மும்பெல்லாம் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அதிக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்த பிரியா பவானி தற்போது சல்வார் அழகில் ஜொலிக்கிறார்.
விதவிதமான சல்வாரில் ரக ரகமாக இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து, கண் கொட்டாமல் ரசித்து வருகிறார்கள் இளம் ரசிகர்கள்.
அந்த வகையில் நீங்காத புன்னகையோடு இவர் ஆஷ் கலர் சல்வார் அணிந்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாகவே செம்ம ஸ்லிம் லுக்கில் வலம் வந்த பிரியா பவானி ஷங்கர், இந்த புகைப்படத்தில் சற்று உடல் எடை ஏற்றியது போல்... கும்மென்ற அழகில் மிளிர்கிறார்.