- Home
- Cinema
- கஸ்டடி முதல் சாகுந்தலம் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ
கஸ்டடி முதல் சாகுந்தலம் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீசா? - முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் வருகிற மே 12-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் பற்றிய முழு விவரத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தியேட்டரில் ரிலீசாகும் படங்கள்
கஸ்டடி
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கஸ்டடி. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து இருக்கிறார். இப்படம் மே 12-ந் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இசையமைத்து உள்ளனர்.
ஃபர்ஹானா
ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் தான் ஃபர்ஹானா. நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ள இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் மே 12-ந் தேதி திரைகாண உள்ளது.
இராவண கோட்டம்
மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இராவண கோட்டம் திரைப்படமும் வருகிற மே 12-ந் தேதி ரிலீசாக உள்ளது. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... சமந்தாவின் மாஜி கணவருடன் காதலா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா
குட் நைட்
புதுமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் குட் நைட். ஜெய் பீம் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மே 12-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குறட்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது.
ஓடிடியில் ரிலீசாகும் தமிழ் படங்கள்
பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற மே 12-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. நடிகை சமந்தா நடித்துள்ள சரித்திர திரைப்படமான சாகுந்தலம் வருகிற மே 12-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சொப்பன சுந்தரி திரைப்படம் வருகிற மே 12-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாக உள்ளது. இதுதவிர அருள்நிதியின் திருவின் குரல் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும், விமல் நடித்த தெய்வ மச்சான் திரைப்படம் டெண்ட் கொட்டாவிலும் மே 12-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்ற குட்டி நயன் அனிகா சுரேந்திரன்... வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.