சரத்குமார் மீது தனுஷின் தாய் போட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
நடிகர் தனுஷின் தாய் நடிகர் சரத்குமார் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது என்ற தகவல் வைரலாகப் பரவி வருகிறது.
Sarathkumar Aapartment case
நடிகர் தனுஷின் தாய் தனது குடும்பத்தினருடன் சென்னை தியாகராஜ நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கிறார். இந்த அப்பார்ட்மெண்டில் உள்ள மேல்தளம் அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் பொதுவாக உள்ளது.
Dhanush with mother
இந்நிலையில், அப்பார்ட்மெண்ட் மேல் தளத்தை சரத்குமார் ஆக்கிரமித்துள்ளார் என்றும் அந்த இடத்தை வணிக ரீதியாக தனது தேவைக்கு பயன்படுத்தி வருவதாகவும் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
Case against Sarathkumar
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அடுத்து நடிகர் தனுஷின் தாய் உள்பட அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள சில குடியிருப்பு வாசிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
Actor Dhanush
நடிகர் சரத்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர் மட்டும் அப்பார்ட்மெண்ட் மேல் பகுதியிலுள்ள பொதுவான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். மற்ற குடியிருப்புவாசிகள் அங்கு வருவதையும் தடுக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
Sarathkumar with Radhika
இதனால் குடியிருப்பின் மேல் தளத்தை அனைவருக்கும் பொதுவான பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Dhanush
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை மாநகராட்சி மற்றும் நடிகர் சரத்குமார் தரப்பில் விளக்கமான பதிலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தவிட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.