MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஓடிடியில் கெத்துகாட்டும் கூலி... அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

ஓடிடியில் கெத்துகாட்டும் கூலி... அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

ஓடிடி தளத்தில் கடந்த செப்டம்பர் 15ந் தேதி முதல் 21ந் தேதி வரை அதிக பார்வைகளை பெற்ற திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 23 2025, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Top 5 Most Watched Movies and Web Series on OTT
Image Credit : instagram

Top 5 Most Watched Movies and Web Series on OTT

திரையரங்குகளைப் போல் ஓடிடி தளங்களிலும் வார வாரம் புதுப் படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகி வருகின்றன. தற்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடிக்கு வந்துவிடுகிறது. இதனால் முன்பைப் போல் 50 நாள், 100 நாள் ஓடும் படங்கள் மிக அபூர்வமாக உள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 21ந் தேதி வரை ஓடிடியில் வெளியாகி அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் லிஸ்ட்டை ஓர்மேக்ஸ் என்கிற தளம் வெளியிட்டு இருக்கிறது. அதில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
டாப் 5ல் இடம்பெற்ற கூலி
Image Credit : instagram

டாப் 5ல் இடம்பெற்ற கூலி

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்கள் பட்டியலில் இந்தியில் 6 கோடி பட்ஜெட்டில் ரிலீஸ் ஆகி 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய சையாரா என்கிற பாலிவுட் படம் தான் முதலிடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படத்திற்கு 60 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு கடந்த வாரம் 49 லட்சம் வியூஸ் கிடைத்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

34
அதிக வியூஸ் அள்ளிய படங்கள்
Image Credit : instagram

அதிக வியூஸ் அள்ளிய படங்கள்

அதிக வியூஸ் அள்ளிய படங்கள் பட்டியலில் மகா அவதார் நரசிம்மா என்கிற அனிமேஷன் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் கடந்த வாரம் தான் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இதற்கு 33 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதையடுத்து நான்காம் இடத்தில் இன்ஸ்பெக்டர் ஜிண்டே என்கிற பாலிவுட் படம் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிவரும் இந்த படத்திற்கு 21 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் சின்னர்ஸ் என்கிற அமெரிக்க ஹாரர் திரைப்படம் ஐந்தாம் இடத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த படத்திற்கு 12 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.

44
அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்கள்
Image Credit : instagram

அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்கள்

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்கள் பட்டியலில் Half CA என்கிற வெப் தொடரின் இரண்டாவது சீசன் 5ம் இடத்தில் உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் தொடர் 12 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. இதையடுத்து நான்காவது இடத்தில் வெட்னெஸ்டே என்கிற ஆங்கில வெப் தொடரின் இரண்டாவது சீசன் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் தொடருக்கு 15 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. 

20 லட்சம் வியூஸ் உடன் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் Do You Wanna Partner என்கிற வெப் தொடர் மூன்றாம் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள The Trial என்கிற வெப் தொடரின் இரண்டாவது சீசன் 25 லட்சம் வியூஸ் உடன் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது. முதலிடத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கிய The Bads of Bollywood என்கிற வெப் தொடர் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் தொடர் 46 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
ஓடிடி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
ராம் சரணின் 'பெட்டி' படத்தின் ஓடிடி உரிமை எத்தனை கோடி தெரியுமா?
Recommended image2
இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லோகா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போ? படக்குழு கொடுத்த அடிபொலி அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved