MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? 2025-ல் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? 2025-ல் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

2025-ம் ஆண்டு தொடங்கி 9 மாதங்கள் நிறைவடையப் போகிறது. இந்த காலகட்டத்தில் ரிலீஸ் ஆன படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூலை வாரிக் குவித்த டாப் 10 படங்களை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 26 2025, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Top 10 Highest Grossing Movies in Tamilnadu
Image Credit : instagram

Top 10 Highest Grossing Movies in Tamilnadu

2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்த ஆண்டாகவே அமைந்திருக்கிறது. இந்த ஆண்டு வெற்றிபெற்ற படங்களைக் காட்டிலும் தோல்வி அடைந்த படங்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதுவரை கிட்டத்தட்ட 200 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கும். அதில் 20 படங்கள் கூட வெற்றிவாகை சூடி இருக்காது. இந்த நிலையில், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
10. தக் லைஃப்
Image Credit : X

10. தக் லைஃப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த படம் தக் லைஃப், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி தோல்வியடைந்த இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.44 கோடி வசூலித்து 10ம் இடத்தில் உள்ளது,

311
9. ரெட்ரோ
Image Credit : Twitter

9. ரெட்ரோ

தமிழ் நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் சூர்யாவின் ரெட்ரோ 9-வது இடத்தில் உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் தமிழ்நாட்டில் 51 கோடி வசூலித்தது.

411
8. மதகஜராஜா
Image Credit : our own

8. மதகஜராஜா

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் மதகஜராஜா. விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இப்படம் தமிழ்நாட்டில் ரூ.52 கோடி வசூலித்து 8ம் இடத்தில் உள்ளது.

511
7. மதராஸி
Image Credit : instagram

7. மதராஸி

சிவகார்த்திகேயன் நடிப்பில் இம்மாதம் திரைக்கு வந்த படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் எஸ்.கே.வுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.56 கோடி வசூலித்து 7ம் இடத்தை பிடித்துள்ளது.

611
6. தலைவன் தலைவி
Image Credit : x/SathyaJyothi

6. தலைவன் தலைவி

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த படம் தலைவன் தலைவி. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.59 கோடி வசூலை வாரிக்குவித்து 6ம் இடத்தில் உள்ளது.

711
5. டூரிஸ்ட் ஃபேமிலி
Image Credit : simran instagram

5. டூரிஸ்ட் ஃபேமிலி

சசிகுமார் கதையின் நாயகனாக நடித்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி. அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படத்தில் சிம்ரன், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.63 கோடி வசூலித்து 5ம் இடத்தில் உள்ளது.

811
4. டிராகன்
Image Credit : our own

4. டிராகன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், விஜே சித்து, ஹர்ஷத் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் தமிழ்நாட்டில் ரூ.78 கோடி வசூலித்து 4ம் இடத்தை பிடித்துள்ளது.

911
3. விடாமுயற்சி
Image Credit : our own

3. விடாமுயற்சி

இந்த பட்டியலில் இரண்டு அஜித் படங்கள் இடம்பெற்று உள்ளன. அதில் ஒன்று தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.79 கோடி வசூலித்து 3ம் இடத்தில் உள்ளது.

1011
2. கூலி
Image Credit : Amazon Prime

2. கூலி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்த படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் தமிழ்நாட்டில் 147.20 கோடி வசூலித்து 2ம் இடத்தில் உள்ளது.

1111
1. குட் பேட் அக்லி
Image Credit : Instagram

1. குட் பேட் அக்லி

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையை அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் படைத்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 152.20 கோடி வசூலித்து கெத்தாக முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Related Stories
Recommended image1
தென்னிந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் யார்... யார்? முதலிடத்தில் கூலி பட வில்லன் நடிகர்..!
Recommended image2
அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... லிஸ்ட்டில் தனி ஒருவனாக இருக்கும் தமிழ் படம் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved