MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 73 வயதிலும் மனுஷன் அம்புட்டு பிசி! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் இத்தனை படங்களா?

73 வயதிலும் மனுஷன் அம்புட்டு பிசி! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் இத்தனை படங்களா?

Rajinikanth Movie Line Up : தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தற்போது கைவசம் என்னென்ன படங்களை வைத்திருக்கிறார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 01 2024, 07:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vettaiyan Rajinikanth

Vettaiyan Rajinikanth

கோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் 73 வயதிலும் செம்ம பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் தற்போது உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

வேட்டையன்

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் படம் வேட்டையன். இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். மேலும் ரித்திகா, துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், பகத் பாசில், ரக்‌ஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 10ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையையொட்டி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Coolie

Coolie

கூலி

ரஜினிகாந்தின் கைவசம் உள்ள மற்றொரு படம் கூலி. இப்படத்தை டிரெண்டிங் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தங்கக் கடத்தலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி வருகிறார் லோகி. இப்படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைக்கிறார்.

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேங்ஸ்டராக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்துக்கு என்னாச்சு; திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? மனைவி லதா விளக்கம்

34
Jailer 2

Jailer 2

ஜெயிலர் 2

ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ஜெயிலர். இப்படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

கூலி படத்தில் நடித்து முடித்த கையோடு ஜெயிலர் 2 பட ஷூட்டிங்கில் ரஜினி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஹுகும் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

44
Mari selvaraj

Mari selvaraj

மேலும் 2 படம்

கைவசம் 3 படங்களை வைத்திருக்கும் ரஜினிகாந்த் மேலும் 2 படங்களுக்கான கதையையும் கேட்டுள்ளாராம். அதில் ஒரு படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துள்ள மாரி செல்வராஜ் ரஜினியை சந்தித்து கதை சொன்னதாகவும் அந்த கதை ரஜினிக்கு பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்த 2018 படத்தை இயக்கிய ஜூடு அந்தோனி ஜோசப்பும் ரஜினிகாந்துக்கு கதை ஒன்றை கூறி இருக்கிறாராம். ரஜினிக்கு அந்த கதையில் ஈடுபாடு உள்ளதால் அதிலும் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... தன் வளர்ச்சியில் துணை நின்ற ஜாம்பவான்கள்.. நேரில் சென்று நலம் விசாரித்த ரஜினிகாந்த் - வைரல் பிக்ஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூலி (ரஜினிகாந்த் திரைப்படம்)
ஜெயிலர் 2
ரஜினிகாந்த்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image2
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved