'கூலி' படத்தின் சிக்கிட்டு கிலிம்ஸி; செம்ம வைப் மூடில் டான்ஸில் தெறிக்கவிட்ட தலைவர்!
தலைவர் பிறந்தநாள் ட்ரீட்டாக 'கூலி' படத்தில் இருந்து வெளியாகியுள்ள கிலிம்ஸி வீடியோவில் டான்ஸில் சூப்பர் ஸ்டார் தெறிக்க விட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
Rajinikanth Coolie Movie
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், 'கூலி' படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இன்றைய தினம் ரஜினிகாந்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார்.
Rajinikanth Coolie Glimpse Video
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடைசியாக வெளியான 'வேட்டையன்' திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் தான் ஒட்டு மொத்த தலைவர் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது இந்த அப்டேட் மீதான ஆர்வம் அதிகரித்தது.
தலைவர் பிறந்தநாள் ட்ரீட்டாக 'கூலி' படத்தில் இருந்து வெளியானது சிக்கிட்டு கிலிம்ஸி வீடியோ!
Chikitu Glimpse Video Rajinikanth Dance
உலகநாயகனுக்கு 'விக்ரம்' மூலம் வெறித்தன ஹிட் கொடுத்த லோகி, தலைவரை வைத்து படம் இயக்கினால் சொல்லவா வேணும்... தென்னிந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு ஒரு சிறந்த படமாக இருக்கும் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள். அவர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதமாக இந்த படத்தின் காஸ்டிங்கும் உள்ளது. நாகார்ஜுனா, உப்பேந்திரா, அமீர் கான், என சூப்பர் ஸ்டார் நடிகர்களை இந்த படத்தில் ஒருங்கிணைத்து நடிக்க வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
Rajinikanth Kerchief Dance
தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு, ஜெய்ப்பூரில் நேற்று ஆரம்பமானதாக கூறப்படுகிறது. இதற்காக தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த். அமீர்கானுடன் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
'மகாராஜா' பட நடிகர் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட நாக சைதன்யா - சோபிதா! போட்டோஸ்!
Rajinikanth Amazing Dance Step
இந்நிலையில் தலைவர் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதத்தில், 'கூலி' படத்தின், சிக்கிட்டு பாடலின் கிலிம்ஸி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தலைவர் செம்ம ஸ்டைலாக 200-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுடன் டான்சில் தெறிக்கவிட்டுள்ளார். குறிப்பாக தலைவர் ஆடும் கர்ச்சீப் டான்ஸ் செப் தரமாக உள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் இதோ.