- Home
- Cinema
- 1.6 கோடி புக்கிங்..! மலேசியாவில் தளபதி விஜய்யை அடித்து காலி செய்யும் சூப்பர் ஸ்டாரின் கூலி
1.6 கோடி புக்கிங்..! மலேசியாவில் தளபதி விஜய்யை அடித்து காலி செய்யும் சூப்பர் ஸ்டாரின் கூலி
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் மலேசியாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதற்கான முன்பதிவும் அங்கு படுஜோராக நடைபெற்று வருகிறது.

Coolie Movie Pre Booking Record
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர் என பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில், கூலி படத்தின் முன்பதிவும் வெளிநாடுகளில் தொடங்கி படு ஜோராக நடைபெற்று வருகிறது.
மலேசியாவில் மாஸ் காட்டும் கூலி
இந்தியா தவிர தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. அங்கும் கூலி படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதன்காரணமாக மலேசியாவில் அப்படத்திற்கான முன்பதிவு படு ஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், தற்போதே மலேசியாவில், கூலி படம் முன்பதிவு மூலம் ரூ.1.6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதனால் இதற்கு முந்தைய முன்பதிவு சாதனைகளை கூலி தகர்க்க அதிகம் வாய்ப்பு உள்ளது.
லியோ சாதனையை தகர்க்க தயாராகும் கூலி
மலேசியாவில் முன்பதிவு மூலம் அதிக வசூல் அள்ளிய தமிழ் படமாக விஜய்யின் லியோ உள்ளது. அந்த சாதனையை கூலி திரைப்படம் தகர்க்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாம். தற்போது வரை மலேசியாவில் கூலி படத்திற்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகி உள்ளதாம். இதனால் முதல் நாளில் ரெக்கார்ட் பிரேக்கிங் கலெக்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கூலி படத்திற்கு செம டிமாண்ட் இருந்து வருகிறது.
கூலி படத்தின் ஸ்பெஷல்
கூலி திரைப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியது என்பதால் இதற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதன்மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் ரஜினி படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் கிரீன் மேட் காட்சிகளே இருக்காது என கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். பெரும்பாலும் ரியல் லொகேஷனில் தான் படமாக்கி இருக்கிறார்களாம். ரஜினிகாந்த் ஆக்ஷன் காட்சிகள் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளதாகவும் லோகி கூறி உள்ளார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழில் முதன்முதலில் 1000 கோடி வசூல் அள்ளிய படம் என்கிற பெருமையை கூலி பெறும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

