குக் வித் கோமாளிக்கு எண்டு கார்டு போடும் முடிவில் விஜய் டிவி; காரணம் என்ன?
Cooku With Comali : விஜய் டிவியில் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
Cooku with Comali
சமையல் நிகழ்ச்சி என்றாலே சீரியஸாக இருக்கும் என்கிற டிரெண்டை மாற்றி, கலகலப்பான ஒரு குக்கிங் ஷோவாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்நிகழ்ச்சியின் 5 சீசன்கள் முடிவடைந்து உள்ளது. இதில் முதல் நான்கு சீசனில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். அதேபோல் இந்த நான்கு சீசன்களையும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது.
CWC
ஆனால் கடந்த ஆண்டு விஜய் டிவிக்கும் மீடியா மேசன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகினார்கள். இதனால் புது டீம் உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனை நடத்திய விஜய் டிவி அதில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜை நடுவராக களமிறக்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா டைட்டில் வின்னர் ஆனார்.
cook with comali Judges
குக் வித் கோமாளியின் முதல் நான்கு சீசனை போல ஐந்தாவது சீசன் இல்லை என்பது பரவலாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த சீசனில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும், போட்டியாளராக கலந்துகொண்ட பிரியங்காவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக விலகிய மணிமேகலை, பிரியங்காவை நேரடியாக விமர்சித்து வீடியோ வெளியிட்டது பேசுபொருள் ஆனது.
இதையும் படியுங்கள்... ‘குக்கு வித் கோமாளி 5’ மணிமேகலைக்கு பதிலாக ரக்ஷனுடன் கைகோர்த்த பிரபலம்!!
Venkatesh Bhatt
அதேபோல் விஜய் டிவியில் இருந்து விலகிய மீடியா மேசன்ஸ் நிறுவனம் சன் டிவியுடன் கைகோர்த்து டாப்பு குக்கு டூப்பு குக்கு என்கிற குக்கிங் நிகழ்ச்சியை நடத்து வெற்றி கண்டது. அந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருந்தார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் பற்றிய அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த சீசன் முதல் அந்நிகழ்ச்சியின் பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Cooku with comali Name Change
அந்நிகழ்ச்சிக்கு பெயர் வைத்த மீடியா மேசன்ஸ் நிறுவனமே விலகிவிட்டதால், அதே பெயருடன் பயணிக்க விஜய் டிவி தரப்பு விரும்பவில்லையாம். இதனால் பெயரை மாற்றி புதுப் பெயருடன் அந்நிகழ்ச்சியை நடத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இன்னும் சில மாதங்களில் இதன் அடுத்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அதில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ