BIGG BOSS: பிக்பாஸ் சீசன் 6-ன் முதல் போட்டியாளர் குக் வித் கோமாளி ரக்ஷனா..? அட...ஆரம்பமே அமர்க்களமா இருக்கே.?
Cook with Comali Rakshan: விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6-ல், முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
BIGGBOSS
பிக் பிரதர் நிகழ்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் டிவியில், கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளன. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது.
BIGGBOSS
இந்த நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் முதல் யூட்யூப் பிரபலங்கள், மாடல் வரை பல்வேறு போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டனர். முதல் பாகத்தில் ஆரவ் ,இரண்டாம் பாகத்தின் ரித்விகா, மூன்றாம் பாகத்தில் முகன் ராவ், நான்காம் பாகத்தில் ஆரி அர்ஜுன், 5 வது சீசனில் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். குறுகிய காலத்திலேயே மமக்களிடையே அதிக வரவேற்பை பெற்று தந்த நிகழ்ச்சியில் இதுவும் ஒன்றாகும்.
BIGGBOSS
இதையடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் என்ற ஓடிடிக்கென பிரத்யேகமாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து விக்ரம் பட ஷுட்டிங் காரணமாக அவர் விலகியதையடுத்து, சில வாரம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். இதில், கடந்த 5 சீசன்களில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டன. இறுதில், பாலாஜி முருகதாஸ் வெற்றி பெற்றார். அவருக்கு டிராபி உடன் 35 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
BIGGBOSS
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த ரக்ஷன் கடந்த பிக்பாஸ் சீசன்-5 கலந்து கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் 6-ல் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். மேலும், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருகிறதாம், இதையடுத்து சீசன் வழக்கம் போல் அக்டோபர் மாதன் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.