Aishwarya: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓப்பனாக சொன்ன ஹெல்த் சீக்ரெட்...இதெல்லாம் ட்ரை பண்ணுங்கோ..அப்பறம் பாருங்க
Aishwarya Rajinikanth: யோகாவா..? ஜிம்மோ..? நமக்கு எது செட் ஆகும் என்று நமது உடலே கூறும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரசிகர்களுடன் ஹெல்த் சீக்ரெட் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
Aishwarya Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா,இவர் கடந்த 2004-ம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். காதல் ஜோடிகளாக வளம் வந்த இவர்கள் கடந்த ஜனவரியில் தங்களது விவகாரத்தை அறிவித்தனர்.
Aishwarya Rajinikanth
இந்த செய்தி காட்டு தீ போல் பரவி, ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், குடும்பத்தினரும், நண்பர்களும் இறங்கினர்.இருப்பினும், ஒன்று சேராமல் இருவரும் அவரவர் வேளைகளில் பிசியாகி விட்டனர்.
Aishwarya Rajinikanth
தனுஷ் கோலிவுட்,டோலிவுட், ஹாலிவுட் என தெறிக்கவிட்டு வருகிறார். தனுஷ் நடிப்பில் தற்போது திருச்சிற்றம் படம் ரிலீசாக இருக்கிறது. அதேபோன்று, ஐஸ்வர்யாவும் மியூசிக் ஆல்பம், பட இயக்கம் என புது புது அவதாரத்தில் மாஸ் காட்டி வருகிறார். அதுமட்டுமின்று, ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
Aishwarya Rajinikanth
இருவரும் அவ்வப்போது, தங்களுடைய இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்கள். தற்போது சைக்கிளிங், ஒர்கவுட் ,யோகா என படு பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா தனது வழக்கமான நிகழ்வுகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
Aishwarya Rajinikanth
அடிக்கடி, வெறித்தனமாக ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோவை பதிவு செய்து வருவார். அந்த வகையில், தற்போது ஐஸ்வர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் அவர், யார் ஒருவர் 108 சூரிய நமஸ்காரங்களையும் செய்து வருகிறாரோ அவரது உடலின் மேற்பகுதி வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் வாரத்தில் மூன்று நாட்கள், ஸ்குவாட் பயிற்சிகள் செய்தால் உடலின் கீழ் பகுதி வலுப்பெறும் என்று கூறியுள்ளார். யோகாவா..? ஜிம்மோ..? நமக்கு எது செட் ஆகும் என்று நமது உடலே கூறும் என்றும், யாருக்கும் நாம் எதையும் நிரூபிக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.