- Home
- Cinema
- திருமணம் எப்போது...? வருங்கால மனைவியுடன் போட்டோ பதிவிட்டு குட் நியூஸ் சொன்ன ‘குக் வித் கோமாளி’ புகழ்
திருமணம் எப்போது...? வருங்கால மனைவியுடன் போட்டோ பதிவிட்டு குட் நியூஸ் சொன்ன ‘குக் வித் கோமாளி’ புகழ்
Pugazh Marriage : குக் வித் கோமாளியில் காமெடியனாக வந்து, தற்போது சினிமாவில் ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கும் புகழ், தனது திருமணம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்பு டா எனும் நிகழ்ச்சியில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் புகழ். அந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இவர் அந்நியன் கெட் அப்பில் திறம்பட நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதன்மூலம் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் ஒப்பந்தமான சமயத்தில் இவருக்கு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் மாஸ்டர் பட வாய்ப்பை நிராகரித்து விட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தான் முன்னுரிமை கொடுத்தார் புகழ். அவரின் இந்த முடிவு அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது உடல் மொழியாலும், டைமிங் காமெடிகளாலும் ரசிகர்களை கவர்ந்த புகழ், குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களில் மட்டும் முழுநேர கோமாளியாக பங்கேற்ற இவர், மூன்றாவது சீசனுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு சினிமாவில் படு பிசியாகிவிட்டார்.
இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் கேரவனில் இத்தனை வசதிகளா? பிரதமர் மோடி கூட இதை தான் பயன்படுத்தினாராம்..! வைரலாகும் தகவல்..!
தற்போது டஜன் கணக்கிலான படங்களை கைவசம் வைத்துள்ளார் புகழ். இதில் பெரும்பாலான படங்களில் காமெடி ரோலில் அவர் நடித்தாலும், மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் புகழ், தற்போது திருமணம் குறித்து குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார். அவர் பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெயிட்டுள்ளார் புகழ். அதன்படி திருமணத்துக்கு முன் நடத்தப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ள புகழ், அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். விரைவில் திருமண தேதியை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சூர்யா, ஜோதிகா, தனுஷ், போன்ற நடிகர்கள் கலந்து கொண்ட ராதிகாவின் பிறந்தநாள் பார்ட்டி.! வைரலாகும் போட்டோஸ்!