ஹீரோவை விட காமெடியனுக்கு தான் மவுசு சாஸ்தி – ரோல் மாடலாக திகழும் கவுண்டமணி, செந்தில், வடிவேலு!
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட காமெடியன்களுக்கு இருந்த மவுசு சாஸ்தி. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றோர் தங்கள் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தனர். இவர்களது காமெடி இன்றளவும் ரசிக்கப்படுகிறது.
Goundamani, Senthil, Vadivelu
ஹீரோவை விட காமெடியனுக்கு தான் மவுசு சாஸ்தி. தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக கொடி கட்டி பறந்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு மற்றும் விவேக் ஆகியோரை உதாரணமாக சொல்லலாம். 1964 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் கவுண்டமணி.
Goundamani, Senthil, Vadivelu
ஹீரோக்களே கவுண்டமணி தான் வேண்டும் என்று இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் அடம் பிடிக்கும் அளவிற்கு கவுண்டமணியின் மவுசு சாஸ்தி. அவருக்கு இணையாக செந்திலும் கலக்கோ கலக்கு என்று தமிழ் சினிமாவை களக்கினார்.
Goundamani, Senthil, Vadivelu
கவுண்டமணி மற்றும் செந்தில் இல்லாத படங்களே தமிழ் சினிமாவில் இல்லை என்று கூறும் அளவிற்கு இருவரும் கொடி கட்டி பறந்தார்கள். இவர்களது காமெடி பட்டி தொட்டியெங்கும் பரவியது. எம்ஜிஆர், சிவாஜி படங்களுக்கு நாகேஷ் – மனோரமா, நாகேஷ் – சச்சு, சோ – மனோரமா, சோ – சச்சு காம்போ எப்படியோ அப்படி, கவுண்டமனி – செந்தில், கவுண்டமணி – கோவை சரளா, செந்தில் – கோவை சரளா காமெடியை சொல்லலாம்.
Goundamani, Senthil, Vadivelu
கதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் இதையெல்லாம் தாண்டி ஒரு படத்திற்கு பாடல்களும், காமெடி கதாபாத்திரங்களும் முக்கியம். ஹீரோவால் ஹிட் கொடுக்க முடியாத படங்களை கூட கவுண்டமணி – செந்தில் காம்போ 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்து தயாரிப்பாளர்களுக்கு வசூல் அள்ளி கொடுத்திருக்கிறது.
Goundamani, Senthil, Vadivelu
கவுண்டமணிக்கு செந்தில் மட்டுமின்றி வடிவேலுவும் சூப்பர் இணை தான். இந்த மூவர் கூட்டணி ஏராளமான படங்களை ஹிட் கொடுத்திருக்கிறது. கவுண்டமணி காமெடியன்கள் கூட மட்டுமின்றி சத்யராஜ், பிரபு, அர்ஜூன், விஜய் ஆகியோருடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார்.
Goundamani, Senthil, Vadivelu
அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் காமெடியன்களின் புகழ் கொடிகட்டி பறந்தது. காமெடி ரோல் மட்டுமின்றி ஹீரோவாகவும் தன்னால் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் கவுண்டமணி. வில்லனாகவும் ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
Goundamani, Senthil, Vadivelu
80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸூக்கு கவுண்டமணி, செந்தில் காமெடியால் சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மூவி ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கூட கவுண்டமணி ரைமிங் காமெடியில் கில்லாடி என்று பல மேடைகளில் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு ஹீரோக்களை விட காமெடியன்களே ஒசதி என்று நிரூபித்தவர்களில் இவர்களது பங்கு ரொம்பவே முக்கியமானது.
Goundamani, Senthil, Vadivelu
கவுண்டமணியிடம் அடி வாங்கவில்லை என்றால் செந்தில் கதாபாத்திரம் வெளி உலகத்திற்கு தெரிந்திருக்காது. அது போல சமூகத்திற்கு கருத்து கந்தசாமியாக திகழவில்லை என்றால் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டிருக்காது. வடிவேலுவின் காமெடி இவர்களில் சற்று வித்தியாசம். அவரது டிராக் தனி. இப்படி கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், கோவை சரளா காமெடிகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.