250 படங்களுக்குப் பிறகு அடித்த ஜாக்பாட்... முதன் முறையாக ஹீரோவாகும் காமெடி நடிகர் செந்தில்...!
First Published Jan 7, 2021, 2:06 PM IST
சுமார் 250 படங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த செந்திலுக்கு தற்போது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது தமிழ் சினிமாவை வடிவேலு, விவேக், சூரி, யோகிபாபு, சந்தானம் என எத்தனையோ காமெடி நடிகர்கள் கலக்கினாலும் என்றுமே காமெடி ஜாம்பவான்கள் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் என்றால் அது கவுண்டமனி - செந்தில் மட்டுமே.

80, 90களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி கூட்டணியாக கவுண்டமனி - செந்தில் கூட்டணி அமைந்தது. குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியை இன்று பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்காதவர்களே கிடையாது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?