MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bharathiraja : தேம்பி அழுத முதல்வர் விஜய்; கலங்கிப்போன சூர்யா - பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த பிரபலங்கள்

Bharathiraja : தேம்பி அழுத முதல்வர் விஜய்; கலங்கிப்போன சூர்யா - பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்த குவிந்த பிரபலங்கள்

Bharathiraja Passes Away : இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரிடம் உடலுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 10 2026, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Celebrities Paid Last respect to Director Bharathiraja
Image Credit : X

Celebrities Paid Last respect to Director Bharathiraja

1977-ல் வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில், 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய அவர், சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 'இயக்குநர் இமயம்' என்று அழைக்கப்பட்டார். 'கிழக்கே போகும் ரயில்,' 'சிகப்பு ரோஜாக்கள்,' 'அலைகள் ஓய்வதில்லை,' 'காதல் ஓவியம்' மற்றும் 'முதல் மரியாதை' போன்ற அவரது பல படங்கள் இன்று கிளாசிக் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.

Bharathiraja Awards: பத்மஸ்ரீ முதல் 6 தேசிய விருதுகள் வரை... இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பிரம்மாண்ட சாதனைகள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
Image Credit : instagram

அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

'மாடர்ன் லவ் சென்னை' ஆந்தாலஜி தொடரில் இடம்பெற்ற 'பறவை கூட்டில் வாழும் மான்கள்' என்பதுதான் அவர் இயக்கிய கடைசிப் படைப்பு. இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு நடிகராகவும் பாரதிராஜா வெற்றி கண்டார். மோகன்லால் நடித்த 'தொடரும்' படத்தில் சமீபத்தில் திரையில் தோன்றியிருந்தார். இன்னும் வெளியாகாத 'புலவர்' படம்தான் ஒரு நடிகராக அவரது கடைசிப் படமாக இருக்கும். இதுதவிர, 'ஆயுத எழுத்து,' 'பாண்டியநாடு,' 'ஈஸ்வரன்,' 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'மகாராஜா' போன்ற படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

Related Articles

Related image1
Now Playing
BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
Related image2
Bharathiraja : கிராமத்து கதைகள் மட்டுமல்ல... த்ரில்லர் படங்களிலும் முத்திரை பதித்த பாரதிராஜா! இயக்குநர் இமயத்தின் டாப் 5 த்ரில்லர் மூவீஸ் இதோ
35
முதல்வர் விஜய் அஞ்சலி
Image Credit : instagram

முதல்வர் விஜய் அஞ்சலி

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, வயது மூப்பு காரணமாக தனது 85-வது வயதில் காலமானார். அவரின் உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக சென்னையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குச் சென்ற முதல்வர், அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

45
சினிமா பிரபலங்கள் அஞ்சலி
Image Credit : instagram

சினிமா பிரபலங்கள் அஞ்சலி

முன்னதாக, முதல்வர் விஜய் தனது X பக்கத்திலும் பாரதிராஜாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். 'கிராமத்து வாழ்க்கையின் உயிரோட்டத்தை' வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா என்று குறிப்பிட்ட முதல்வர், தனது தனித்துவமான கதை சொல்லும் விதத்தாலும், அழுத்தமான கதாபாத்திரங்களாலும் தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் என்று புகழாரம் சூட்டினார். தமிழ் சினிமா உலகிற்கு திரு. பாரதிராஜா ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என்றும் விஜய் அறிவித்தார்.

55
அஞ்சலி செலுத்தியது யார்... யார்?
Image Credit : instagram

அஞ்சலி செலுத்தியது யார்... யார்?

இதுதவிர நடிகர் சூர்யாவும் காலையிலேயே கண்ணீர்மல்க வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகர்கள் சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர்கள் ஷங்கர், பார்த்திபன், சுசீந்திரன், ராஜிவ் மேனன், நடிகை கீர்த்தி சுரேஷ், நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, இசையமைப்பாளர் இளையராஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வந்து அஞ்சலி செலுத்தி உள்ளது. பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான அல்லிநகரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரதிராஜா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Movie Release : ஜனநாயகன் வரலேன்னு கவலைப்படாதீங்க! விஜய் ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீசாகும் மெர்சல் மற்றும் ஜில்லா!
Recommended image2
Ethirneechal : ஆதி குணசேகரனுடன் கூட்டு சேரும் இராவணன்... ஜனனிக்கு செம ஷாக் வெயிட்டிங்
Recommended image3
Now Playing
BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
Related Stories
Recommended image1
Now Playing
BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
Recommended image2
Bharathiraja : கிராமத்து கதைகள் மட்டுமல்ல... த்ரில்லர் படங்களிலும் முத்திரை பதித்த பாரதிராஜா! இயக்குநர் இமயத்தின் டாப் 5 த்ரில்லர் மூவீஸ் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved