மனம் உடைந்து கடைசியாக கெஞ்சிய சித்ரா..! ஒரே வார்த்தையில் உயிரையே விட வைத்த ஹேம்நாத்..!
சீரியல் காட்சியால் ஏற்பட்ட பிரச்சனையே, ஹேமந்த் மற்றும் சித்ரா இடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, அவரை தற்கொலை வரை கொண்டு சென்றதாக கூறப்படும் நிலையில் கடைசியாக சித்ரா ஹேமந்த்திடம் கெஞ்சி பேசியதாக கூறப்படுகிறது.
சித்ரா தற்போது நடித்து வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், கீரியும் - பாம்புமாக இருந்த கதிர் - முல்லை ஜோடி இடையே காதல் மலர்ந்து, இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை துவங்கியது போன்ற காட்சி காட்டப்பட்டு வருகிறது.
மேலும் இருவருக்கும் இடையே முத்த காட்சி, கட்டி பிடிப்பது போன்ற நெருக்கமான காட்சிகளும் படமாக்கப்பட்டது.
இதனால் ஹேமந்த் மற்றும் சித்ராவிற்கு இடையே சிறிய அளவில் தொடங்கிய வாக்கு வாதம் பின்னர், சித்ரா மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தீவிரம் அடைந்தது. எனவே ஹேமந்த் பலமுறை குடித்துவிட்டு சித்ராவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சென்று சண்டையிடுவார் என்பது விசாரணையில் அம்பலமானது.
தன்னுடைய நியாயத்தை ஹேமந்த்திடம் கூற சித்ரா முயன்ற போதும், அவர் பேசிய வார்த்தைகள் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று, சீரியல் நடிகர்களுடன் டிக் டாக் செய்த வீடியோ, அவர் சிரித்து மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள், மற்றும் நெருக்கமாக நடித்த காட்சிகளை சுட்டி காட்டி பிரச்சனை செய்துள்ளார்.
பல முறை ஹேமந்த் பற்றி நண்பர்கள் நெகட்டிவாக பேசி வந்ததால், அனைத்து நண்பர்களிடம் இருந்து சித்ரா விலகினார், அதே நேரத்தில் தன்னுடைய பிரச்னையை பெற்றோரிடமும் கூற முடியாமல் தவித்துள்ளார். இருப்பினும் ஹேமந்த் பற்றி பல மணிநேரம் அவரது தந்தையிடம் சித்ரா பேசிய வீடியோ ஆதாரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஹேமந்த்திடம், நீ இல்லாமல் வாழ முடியாது என சித்ரா, ஆங்கிலத்தில் I'M SO DEPENDENT ON YOU என கூறி கெஞ்சியுள்ளார்.
ஆனால் அவரது காதலை புரிந்து கொள்ளாத ஹேமந்த் திரும்ப திரும்ப நடிப்பு குறித்து பேசி, இதுபோல் நீ நடிப்பதற்கு செத்து போய்விடு என்கிற வார்த்தையை சண்டையின் போது பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதன் பின்னரே மிகவும் மனம் உடைந்த சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வரவும், பல்வேறு கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக ஹேமந்த் பதில் பேசியதாலுமே கைது செய்து போலீசார் 15 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.