- Home
- Cinema
- நீ பத்தினியா இருந்தால் செத்து நிரூபித்து காட்டு..! கொஞ்சநஞ்ச கொடுமையா... அடுத்தடுத்து பகீர் கிளப்பும் தகவல்கள்
நீ பத்தினியா இருந்தால் செத்து நிரூபித்து காட்டு..! கொஞ்சநஞ்ச கொடுமையா... அடுத்தடுத்து பகீர் கிளப்பும் தகவல்கள்
சமீபத்தில் சித்ராவின் தற்கொலை குறித்து, ஹேமந்துடன் பேசிய ஆடியோவை வெளியிட்ட அவருடைய நண்பர் அடுத்தடுத்து பல தகவல்களை வெளியிட்டு வருவதால், மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது சித்ராவின் வழக்கு.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி, சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்போது வரை பல மர்மங்கள் நீடித்து வருகிறது.

இது தற்கொலை அல்ல, கொலை தான் என சித்ராவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆணித்தனமாக கூறிய போதிலும், சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவே மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஹேமந்த் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஹேமந்துடன் பேசிய ஆடியோவை வெளியிட்ட அவருடைய நண்பர் செய்யது ரோகித் பகீர் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக, ஹேமந்த்துடன் பழகி வரும் ரோஹித் அளித்துள்ள தகவல்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் உள்ளது.

ஹேம்நாத் பல பெண்களுடன் பழகியுள்ளார் என்றும் ஆனால் இதுகுறித்து வெளியே சொல்ல முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர் என்று தெரிவித்த ரோஹித், சித்ரா மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை கடித்து குதறி கொடுமை படுத்தியதாக கூறியது கொடுமையில் உச்சமாகவே பார்க்கப்பட்டது.

சித்ரா நடித்து வந்த 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இவர் நாயகனுடன் நெருக்கமாக நடித்த காட்சிகளை தினமும் சொல்லி சொல்லி மன அழுத்தத்தை கொடுத்த ஹேமந்த்.... சித்ராவை தற்கொலைக்கு தூண்டும் விதத்தில், "நீ பத்தினியாக இருந்தால் செத்து நிரூபி' போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி காயப்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே, விரக்தியின் உச்சத்திற்கு சென்ற சித்ரா, தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால், ஹேம்நாத்திற்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என சித்ராவின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.