- Home
- Cinema
- Acharya item song : சூப்பர் ஸ்டாருடன் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்ட ரெஜினா.. வைரலாகும் கிளாமர் போட்டோஸ்
Acharya item song : சூப்பர் ஸ்டாருடன் ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்ட ரெஜினா.. வைரலாகும் கிளாமர் போட்டோஸ்
நடிகை ரெஜினா (Regina), தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாரு ஐட்டம் சாங்கிற்கும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியா, இயக்குனராக அவதாரம் எடுத்த ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரெஜினா கசண்ட்ரா.
இதையடுத்து தமிழில் பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால், டோலிவுட் பக்கம் சென்றார். அங்கு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.
சமீப காலமாக ரெஜினாவின் கதைத் தேர்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல், வில்லி வேடங்களிலும் தைரியமாக நடித்து அசத்துகிறார்.
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அடுத்ததாக அருண்விஜய்யின் பார்டர் படத்திலும் எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ரெஜினா, தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாரு ஐட்டம் சாங்கிற்கும் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சமந்தா ஆடிய ஐட்டம் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய நிலையில், தற்போது அதே பாணியில் தெலுங்கு சூப்பர்ஸ்ட சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ரெஜினா.
சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ததும்ப அவர் ஆடியுள்ள இந்த பாடல், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்துள்ளது.
இந்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ராம்சரண் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆச்சார்யா படம் அடுத்த மாதம் 4-ந் தேதி திரைகாண உள்ளது.