ஒருவழியாக முடிவுக்கு வந்த வாடகைத்தாய் சர்ச்சை..கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டார் சின்மயீ
என் பாதுகாப்பிற்காகவே இந்த செய்தியை வெளியிடாமல் இருந்தேன் எனக் கூறியிருந்தார் சின்மயீ
பின்னணி பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் பிரபலமானவர் சின்மயி ஸ்ரீபாதா. அதைவிட இவருக்கு பிரபலம் கொடுத்தது வைரமுத்து மீது இவர் கொடுத்த மீடு புகார் தான். அதேபோல மீடு புகார் கொடுத்ததோடு அவ்வாறு புகார் கொடுப்பவர்களுக்கும் உறுதுணையாக நின்று வருகிறார்சின்மயீ. அவ்வப்போது சமூக வலைதளத்தையும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து பிரபலமானவர் இவர்.
சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் சின்மயீ, சமீபத்தில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தார். இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான ராகுல் ரவிந்திரன் என்பவரை திருமணம் செய்து எட்டு ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறியிருந்தார். அவருக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை பிறந்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...viduthalai movie update : முடிவுக்கு வருமா சூரியின் படம்... தயாரிப்பாளருக்கு தலைவலியாக மாறிய விடுதலை?
இந்த தகவலை சின்மயீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் இவரது கர்ப்பம் குறித்து பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதுவரை கர்ப்பமாக இருப்பது குறித்தான எந்த புகைப்படங்களும் தகவலும் வெளியாகாத நிலையில் திடீரென உங்களுக்கு எப்படி இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கும். நீங்கள் வாடகைத்தாய் மூலம் தானே பிள்ளைகள் பெற்றீர்கள்? என பலரும் கேள்வி எழுப்பினர்.
chinmayi
இது குறித்த அனைத்து கேள்விகளையும் மறுத்து இருந்தார் சின்மயீ. இந்நிலையில் முதல் முறையாக தனது கர்ப்பகால புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 32 வாரங்களில் கர்ப்பகால புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தனது இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் மூலம் சின்மயி வாடகைக்கு தாய் மூலம் குழந்தை பெற்றார் என்னும் சர்ச்சைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அதோடு ரசிகர்கள் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு...இவ்வளவு நடந்தும் கோபியின் மனைவி என கூறும் பாக்கியா!!அதிர்ந்துபோன ராதிகா
chinmayi
இதற்கிடையே நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தான் சின்மயீ தனது கர்ப்பகால புகைப்படத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதோடு தான் கர்ப்பமாக இருப்பதைப் போன்ற படங்களை வெளியிடாதால் எனக்கு வாடகைக்கு மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததா? என்று என்னை பலர் கேள்வி கேட்கின்றனர். என் பாதுகாப்பிற்காகவே இந்த செய்தியை வெளியிடாமல் இருந்தேன் எனக் கூறியிருந்தார் சின்மயீ.