MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த கேவலத்தை நிறுத்த மாட்டாங்களா? அட்லீயின் தோற்றத்தை கிண்டல் செய்த கபில் ஷர்மாவுக்கு சின்மயி கண்டனம்!

இந்த கேவலத்தை நிறுத்த மாட்டாங்களா? அட்லீயின் தோற்றத்தை கிண்டல் செய்த கபில் ஷர்மாவுக்கு சின்மயி கண்டனம்!

பேபி ஜான் பட புரமோஷனுக்காக கபில் ஷர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அட்லீயின் நிறம் குறித்து கபில் ஷர்மா கேள்வி எழுப்பினார். இதற்கு அட்லீ நிதானமாக பதிலளித்த நிலையில், கபில் ஷர்மாவின் கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அட்லீக்கு ஆதரவாக சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Ramya s
Published : Dec 21 2024, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Baby john movie

Baby john movie

தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தை அட்லீ தயாரித்துள்ளார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

25
Atlee Kapil Sharma

Atlee Kapil Sharma

அந்த வகையில் பேபி ஜான் படத்தின் புரமோஷன் பணிகளுக்காக கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கபில் ஷர்மா, அட்லீயின் நிறத்தை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். அப்போது “ நீங்கள் யாரையாவது சந்திக்க செல்லும் போது, அவர்கள் அட்லீ என்று கேட்டார்களா” என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பினார்.

35
Kapil sharma mocks atlee

Kapil sharma mocks atlee

x

அதற்கு பதிலளித்த அட்லீ “ உங்கள் கேள்வியின் அர்த்தம் எனக்கு புரிகிறது. இந்த நேரத்தில் என் முதல் படத்தை தயாரித்த ஏ.ஆர். முருகதாஸுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அவர் என்னிடம் கதையை மட்டும் தான் கேட்டார். என் திறமையை மட்டுமே அவர் பார்த்தார். நான் எப்படி இருக்கிறேன் என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை. நான் கதை சொன்ன விதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உலகமும் இப்படி தான் இருக்க வேண்டும். ஒருவரின் இதயத்தை வைத்து தான் ஒருவரை மதிப்பிட வேண்டுமே தவிர, தோற்றத்தை வைத்து அல்ல.” நிதானமாக பதிலடி கொடுத்தார் அட்லீ.

45
Atlee

Atlee

எனினும் கபில் ஷர்மாவின் இந்த கேள்வி இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அட்லீக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபிரதா அட்லீ ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.

 

55
Chinmayi condemns Kapil Sharma

Chinmayi condemns Kapil Sharma

அவரின் பதிவில் ““நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரின் தோல் நிறத்தைப் பற்றி கிண்டல் செய்யும், மோசமான மற்றும் இனவெறி நகைச்சுவைகளை அவர்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டார்களா? கபில் ஷர்மா போன்ற செல்வாக்கு ஒருவர் இப்படிச் சொல்வது ஏமாற்றம் அளிக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது கூட, ஆனால் இதில், ஆச்சரியப்படுவதற்கில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
அட்லீ

Latest Videos
Recommended Stories
Recommended image1
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image2
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Recommended image3
அப்பாடி.! அரண்மனை இப்படித்தான் இருக்குமோ?! திரும்பி பார்க்க வைக்கும் விஜய் தேவரகொண்டாவின் ஆடம்பர வீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved